உலகம் முழுவதும் CoronaVirus அதிதீவிரமாக பரவி வருகிறது பல நாடுகள் covid-19 வைரஸை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. Covid-19 தொற்றை சில நாடுகள் கட்டுப்படுத்தி விட்டாலும் ஒரு சில நாடுகள் இன்னும் நோய் தொற்றுகளில் இருந்து மீளாமல் தான் இருக்கிறது.
Corona Virus கட்டுப்படுத்த அரசு எவ்வளவு கட்டுப்பாடு மிதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் covid-19 தொற்றை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. எனவே அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் ஒவ்வொருவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்? Coronavirus அதிதீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணம் என்ன?
Covid-19 தொற்று இடமிருந்து நாம் எப்படி பாதுகாத்துக் கொள்வது இதற்கு நிபுணர்களின் ஆலோசனையை பார்க்க வேண்டும்.
Covid-19 வைரஸ் காற்று மூலமாக பரவக்கூடியது எனவே நீங்கள் ஒரு நபரிடம் பேசும்போது குறைஞ்சபட்சம் ஆரடி இடைவெளிவிட்டு பேச வேண்டும்.
ஒரு நபர் இரும்பும் போது அல்லது தும்பும் போது கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும் மற்றும் சோப்பு அல்லது சனிடைசர் பயன்படுத்தி கைகளை உடனே சுத்தப்படுத்த வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தற்போது ஆய்வின் தகவலின்படி covid-19 தோற்று கண்கள் வழியாக பரவுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். நீங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது முழங்கை சட்டையை அணிந்து கொள்வது வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மற்றொருபுறம் தலைக்கவசம் அணிந்து கொள்வது நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
பொது வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் ஓரிடத்தில் கை வைப்பதை தவிர்த்து விடுங்கள் இதன் மூலமாகவே தொட்டு பரவ வாய்ப்பு உள்ளது. வெளியில் சென்று வந்தவுடன் உங்களுடைய முக கவசத்தை நன்றாக சோப்பு அல்லது சனிடைசர் பயன்படுத்தி சுத்தப்படுத்தி சூரிய ஒளியில் குறைந்தது ஒரு மணி நேரம் வையுங்கள் நன்றாகக் காய்ந்த பிறகு மறுபடியும் பயன்படுத்த தொடங்குங்கள்.
அதேபோல வெளியில் சென்று வந்தவுடன் உங்களுடைய கை கால்கள் அனைத்தையும் நன்றாக சோப்பை பயன்படுத்தி சுத்தப்படுத்துங்கள் முக்கியமாக உங்களுடைய கண்கள் மற்றும் மூக்கு பகுதியினை நன்றாக சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்துங்கள் இந்தப் பகுதி வழியாகவே CoronaVirus ஒரு மனிதனுக்கு எளிதில் பரவக்கூடியது.
இந்தியாவில் இரண்டாவது Corona தோற்று வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒருவருக்கு தோற்று ஏற்பட்டால் அது அவருடையவே முடிந்து விடாது அவர் மூலமாக உறவினர்கள் நண்பர்கள் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் நீங்கள் செய்யும் சிறிய தவறினால் உங்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது இருக்கும் சூழலில் Corona பரவல் அதிகம் இருப்பதால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்!
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் கட்டாயம் முக கவசம் அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள்.