சமீபத்தில் நடந்த ஆப்பிளின் அறிமுக நிகழ்ச்சியில் ஏர் டாக்ஸ் என்ற ட்ராக்கர் வெளியிட்டார்கள்.இதில் இருக்கும் முக்கிய அம்சங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.இதற்கான அறிமுகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
இந்த ஏர் டாக்ஸ் முக்கிய பயன்கள் என்ன என்று பார்க்கலாம் நீங்கள் பயன்படுத்தும் சிறிய பொருட்களை அடிக்கடி தொலைத்து விட்டீர்கள் என்றால் அதை எளிதில் கண்டுபிடிக்க இந்த ஏர் டாக்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.உதாரணத்திற்கு உங்களுடைய பர்ஸ், வாகன சாவி, நீங்கள் தினசரி உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் இதை இணைத்து வைத்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் இதில் என்ன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.இதில் ஜிபிஎஸ் என்று சொல்லக்கூடிய ஓர் இடத்தை கண்டறிவதற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆப்பிள் இதில் பயன்படுத்தவில்லை அதற்கு மாறாக ஆப்பிள் உடைய சொந்த தயாரிப்பான U1 என்ற புதிய சிப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதற்கு கூடவே NFC சொல்லக்கூடிய சிப்பை ஆப்பிள் இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் இதன் கூடவே ப்ளூடூத் வசதியும் உள்ளது.இந்த ஏர் டாக்ஸ் பார்ப்பதற்கு ஒருவா நாணயம் போலவேதான் இருக்கும் ஆனால் சற்று வேறுபட்டது இதன் எடை 11 கிராம் மட்டுமே உள்ளது.இதில் கொடுத்திருக்கும் பேட்டரியின் பயன்பாடு தொடர்ந்து ஒரு வருடம் வரை நீடிக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.ஒருவேளை பேட்டரி பழுதாகி விட்டால் இந்த ஏர் டாக்ஸ் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்று ஆப்பிள் நிர்வாணம் கூறுகிறார்கள்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி மாற்றுவதற்கு நீங்கள் பிரத்யேகமாக எங்கும் எடுத்துச் செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக நீங்களே இதில் இருக்கும் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஏர் டாக்ஸ் இணைப்பதற்கு ஆப்பிள் ஐபோன் 11 அல்லது அதற்கு மேற்பட்ட போனில் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.இதை இணைப்பதற்கு ஆப்பிள் புதிதாக ஒரு செயலி அறிமுகம் செய்திருக்கிறார்கள் இதன் வழியாகவே ஏர் டாக்ஸ் இணைத்துக்கொள்ளலாம் Apple find my என்று சொல்லக்கூடிய இந்த செயலி வழியாகவே நீங்கள் எளிதில் இணைக்கலாம். இந்த செயலி நேரடியாக ஏர் டாக்ஸ் உள்ள U1 சிப்பை தொடர்புகொண்டு உங்களுடைய இருப்பிடத்தை கண்டறியும்.
இந்த ஏர் டாக்ஸ் விலை நீங்கள் ஒன்று வாங்கினால் 3190 ரூபாய்க்கும் மற்றும் நான்கு வாங்கினாள் 10900 ரூபாய்க்கும் சந்தையில் உள்ளது.