இந்தக் கொரோனா காலத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை செய்து வருகிறார்கள் இப்படிப்பட்ட சூழலில் முழுநேரமாக மணி கணினியில் நேரத்தை செலவிடுவதால் மணிகணினியின் பேட்டரி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது இதைப் பற்றிய ஆலோசனையை மணிகணினி தயாரிக்கும் நிறுவனங்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்று பார்க்கலாம் 5 ஆண்டுக்கு முன்பு வரை ஒரு மணிகணினியின் பேட்டரி திறன் அதிக பயன்பாட்டில் இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பழுதாகி விடுகிறது.
தற்போது தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்ததால் பல்வேறு நிறுவனங்கள் பேட்டரியை பாதுகாப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. தற்போது பெரும்பாலான நிறுவனத்தின் மடிக்கணினிகள் 100 சதவீத சார்ஜ் எட்டியவுடன் தானாகவே இணைப்பை துண்டித்துக் கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட தொழில்நுட்ப நடைமுறையில் இருந்தாலும் அதிக மின்னோட்டம் மற்றும் அதிக அழுத்தம் காரணமாக பேட்டரியில் ஒரு சில வருடங்களில் அதிக சிதைவுகள் ஏற்படுகிறது இதைத் தடுப்பதற்கு பல்வேறு மணிகணினி நிறுவனங்கள் புதிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது இதிலிருந்து நமது மணி கணினியை எவ்வாறு பாதுகாப்பது இதைப் பற்றிய கருத்துக்களை பல்வேறு நிறுவன ஆலோசகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
நீங்கள் இருக்கும் பகுதிகளில் அதிக மின்தடை ஏற்படும் என்றால் அந்த சமயத்தில் 100% சார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது இந்த மின்தடை பிரச்சனை உங்களுக்கு பெரும்பாலுமான நேரங்களில் இல்லை என்றால் நீங்கள் 20% இருந்து 80% வரை எப்போதும் சார்ஜ் செய்வதன் மூலமாக உங்களுடைய பேட்டரி திறன் நாட்களை அதிகரிக்கலாம் இதுவே பெரும்பாலான திருமணத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசகர்கள் கருத்தாக உள்ளது.