சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் பணம் பரிமாற்ற சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தது அதன் பிறகு ஒரு சில மாதங்களில் தனியுரிமைக் கொள்கையில் ஒரு சில மாற்றங்களை வாட்ஸ்அப் நிறுவனம் செய்தது வாட்ஸ்அப் பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது
வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை கொள்கையில் எவ்வாறு மாற்றங்கள் செய்தது பொதுவாவே வாட்ஸ்அப் என்று எடுத்துக்கொண்டால் End to end encryption இதற்கான அர்த்தம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் தரவுகளை எந்த ஒரு இடத்திலும் பதிவாகாமல் நேரிடையாக தகவலைப் பெறும் நபரிடம் சென்றடையும் அந்த தகவல் அனுப்பும் நபர் மற்றும் பெறும் நபரைத் தவிர வேறு யாராலும் பார்க்கவும் படிக்கவும் முடியாது.
இதுவே End to end encryption.இதுவரை வாட்ஸ் அப்பை பயன்படுத்த எந்த ஒரு கட்டணமும் கிடையாது பயனர்கள் முழுவதும் இலவசமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள் இப்பொழுது வாட்ஸ்அப் இன் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பற்றி பார்ப்போம் வாட்ஸ்அப் நிறுவனம் எவ்வாறு லாபம் ஈட்டுகிறது குறிப்பாக பார்க்கப்போனால் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எந்த இடத்திலும் லாபம் கிடையாது.
வரக்கூடிய ஆண்டுகளில் வாட்ஸ்அப் நிறுவனம் லாபம் ஈட்ட வே இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்து உள்ளது இதன்படி பயனாளர்கள் பகிரும் வணிக ரீதியான தகவல்களை சேகரித்து வாட்ஸ்அப் இன் தலைமை நிறுவனமான பேஸ்புக்கில் பகிரும்.
வாட்ஸ்அப் இன் தலைமை நிறுவனம் Facebook இந்த பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த சில ஆண்டுகளில் பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரி போன்ற தரவுகள் இணையத்தில் கசிந்தது இதன்பிறகு உலகெங்கும் இந்த தகவல் பேசுபொருள் ஆனது அதன் பிறகு ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பற்றது என்று உலகமெங்கும் இருக்கும் மக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது அதன்பிறகு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் பயனாளர்களின் தரவுகளை பேஸ்புக் இடம் பகிர்ந்து அதன் வழியாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில விளம்பரங்களை காமிக்கும் இதை விரிவாகப் பார்த்தால் நீங்கள் உங்க நண்பரிடம் வாட்ஸப்பில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்றால் அந்தப் பொருள் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை நீங்கள் பேஸ்புக்கில் மற்றும் பிற வலைதளத்தில் காணலாம்.
இப்படிப்பட்ட சூழலில் பயனாளர்கள் மத்தியில் ஒரு சில அச்சம் ஏற்படுகிறது ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு விஷயத்தில் நம்பக தன்மையற்றதாக இருந்தது மீண்டும் பயனாளர்களின் தகவல்கள் கசிந்து விடுமோ என்று பொதுவாகவே அச்சம் ஏற்படுகிறது
வாட்ஸ்அப் தரப்பிலிருந்து கூறப்படுவது வணிகரீதியான கணக்கில் இருந்து பெறப்படும் தகவலை மட்டும் நாங்கள் சேகரிப்போம் என்று கூறுகிறார்கள் இப்போது பயனாளர்களின் பொதுவான கேள்வி வணிகரீதியான கணக்கு end to end encryption அக இருக்காதா இரண்டாவது கேள்வி அப்படி வணிகரீதியான கணக்கிலிருந்து தகவலை சேகரிக்கப்படும் என்றால் சாதாரண கணக்கை பயன்படுத்தும் நபர்களுக்கு எதற்காக குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
தற்போது ஃபேஸ்புக் இன் உரிமையாளராக இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியானது அந்த செய்தியில் சிக்னல் என்ற சமூக வலைதளத்தை மார்க் ஜுக்கர்பெர்க் பயன்படுத்துகிறார் என்ற ஒரு சேதி இணையத்தில் பெரிதும் பேசப்பட்டது
தனியுரிமை கொள்கை பற்றி கவலை இல்லாதவர்கள் வாட்ஸ் அப்பை தாராளமாக பயன்படுத்தலாம் ஆனால் நிபுணர்கள் ஆலோசனை என்னவென்றால் குறுஞ்செய்தி பரிமாற்றத்துக்கு பல்வேறு சமூக வலைதளங்கள் உள்ளது அதில் டெலிகிராம் சிக்னல் போன்றவையும் அடங்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் தனி உரிமை மிகவும் முக்கியம் நன்றி...