முதலாவதாக Flipkart உடைய co-founders Bunny Bansal மற்றும் Sachin Bansal இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கிய நிறுவனம்தான் Flipkart
இந்த இரண்டு நபர்களும் Flipkart நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பாக இருவருமே அமெரிக்காவில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள் முதலாவதாக Sachin Bansal 2006 ஆம் ஆண்டு மற்றும் Bunny Bansal 2007ஆம் ஆண்டு இருவருமே அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்கள்
Flipkart நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அனைவருக்கும் எழுந்த சந்தேகம் Sachin Bansal மற்றும் Bunny Bansal இருவரும் சகோதரர்களா அல்லது உறவினர்களோ என்று சந்தேகம் இருந்தது ஆனால் இருவருமே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் Flipkart நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது இரண்டு ஊழியர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள் ஒருவர் Sachin Bansal மற்றொருவர் Bunny Bansal இதில் Sachin Bansal வரக்கூடிய ஆடற்கலை பார்சல் செய்வார் இன்னொருவரான Bunny Bansal தயாரித்த பார்சல்களை டெலிவரி செய்வார் இப்படி வளர்ந்த நிறுவனம்தான் Flipkart
2015ஆம் ஆண்டு Flipkart நிறுவனம் அறிமுகப்படுத்திய Flipkart big billion days இந்தியாவில் அறிமுகமானதுதான் Flipkart நிறுவனம் வளர்வதற்கு முக்கிய காரணம் வெறும் மூன்று நாட்களில் அதிகப்படியான பொருட்களை விற்ற சாதனையை Flipkart நிறுவனம் பெற்றது Flipkart நிறுவனத்தின் விற்பனை எந்த அளவிற்கு இருந்தது என்றால் 200 million அமெரிக்க டாலர் அளவிற்கு பொருள்களை விற்பனைசெய்து சாதனை படைத்து இருந்தது.
Flipkart அதேபோல 2016ஆம் ஆண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற Flipkart big billion days விற்பனையில் 2015ஆம் ஆண்டு படைத்த சாதனையை இவர்களே முறியடித்தார்கள் அதாவது 225 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனை செய்திருந்தார்கள் அந்த மூன்று நாட்களில் நடைபெற்ற விற்பனையில் அதிகப்படியான காலணிகள் மற்றும் டிவிகளை விற்பனை செய்திருந்தார்கள்.
மேலும் 2014ஆம் ஆண்டு Myntra என்ற ஒரு நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு Flipkart நிறுவனம் வாங்கியது அதேபோல 2016 ஆம் ஆண்டு Flipkart க்கு போட்டியாக இருந்த JABONG என்ற நிறுவனத்தை 70 மில்லியனுக்கு Flipkart நிறுவனம் வாங்கியது மேலும் 2016ஆம் ஆண்டு PhonePe என்ற நிறுவனத்தை Flipkart நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் வெளியான தகவலின்படி 33 ஆயிரம் நபர்கள் Flipkart நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்
என்னதான் Flipkart நிறுவனத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நாடு சிங்கப்பூர் என்பது சிலர் அறியாதது மற்றும் Flipkart நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருப்பது இந்தியாவில் உள்ள பெங்களூரில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Flipkart நிறுவனத்துடைய app ஆனது 100 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் இதுவே இந்திய நிறுவனத்தில் அதிகப்படியான பதிவிறக்க செய்யப்பட்ட முதல் செயலி ஆகும். Flipkart நிறுவனத்தின் 2021 கான மதிப்பு 37.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.