Netflix என்று சொல்லக்கூடிய ஓர் நிறுவனம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது 1997ஆம் ஆண்டு Blockbuster வீடியோ என்ற ஒரு அமெரிக்க நிறுவனம் அமெரிக்காவில் கேசட்டை விற்பனைசெய்யும் ஓர் முன்னணி நிறுவனமாக இருந்தது இந்த நிறுவனத்தின் வேலையானது டிவிடி வாடகைக்கு விட்டு அதன் மூலமாக வருவாய் ஈட்டும் நிறுவனம் மற்றும் இந்த நிறுவனத்தின் அதிகபட்ச வருமானம் எப்படி வருகிறது என்றால் ஒரு வாடிக்கையாளர் சொன்ன தேதிக்குள் டிவிடியை திருப்பிச் செலுத்தாவிட்டால் அவருக்கு ஒரு சில அபராதத்தை விதிப்பார்கள் இந்த நிறுவனத்துக்கு அதிகபட்ச வருவாயை இந்த அபராதம் மூலமாக தான் வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு நபர் இந்த நிறுவனத்துக்கு சென்று ஒரு டிவிடி கேசட்டை வாங்குகிறார் அதன் பிறகு அந்த டிவிடியை சொன்ன தேதிக்குள் திருப்பி செலுத்தாததால் அந்த நபருக்கு இந்த நிறுவனம் ஒரு அபராதத் தொகையை விதிக்கிறது அவருக்கு விதித்த அபராதத் தொகை 40 டாலர் இதனால் கோபமடைந்த அந்த நபர் வெளியில் சென்று ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார்.
Netflix
அப்படி தொடங்கப்பட்ட நிறுவனம் தான் Netflix தொடங்கியவர் பெயர் Reed Hastings 1997ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளத்தில் கேசட்டை வாங்கிக்கொள்ளலாம் பதிவு பண்ண கேசட்டை இரண்டு நாட்களுக்குள் வீட்டுக்கு கேசட் வந்துவிடும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கேசட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் எந்த ஒரு அபராதம் இல்லாமல் திருப்பி செலுத்தி விடலாம் என்ற ஒரு அதிரடியான சலுகையை வழங்குகிறார்.
மேலும் Reed Hastings அறிமுகப்படுத்திய இந்த சலுகையின் மூலமாக பயன்படுத்திய பிறகு மீண்டும் ஒரு புதிய கேசட்டை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார் இப்படிப்பட்ட சலுகையை அறிவித்தது மூலமாக 2004-ஆம் ஆண்டு Netflix நிறுவனத்துடைய வருமானம் என்பது 500 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் Netflix நிறுவனத்துக்கு போட்டியாக Blockbuster என்ற பெரிய நிறுவனம் போட்டியாளராக வந்தது மேலும் ஒரு சில நாட்களில் Blockbuster நிறுவனமும் டிவிடிக்களை மிக்க தொடங்கியிருந்தது Blockbuster நிறுவனத்துடைய இந்த செயல் Netflix நிறுவனத்திற்கு பின்னடைவை தந்தது மேலும் 2007 ஆம் ஆண்டு Netflix நிறுவனத்துடைய 55000 வாடிக்கையாளர்கள் blockbuster நிறுவனத்திற்கு மாறுகிறார்கள் இதன் மூலமாக Netflix நிறுவனம் பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்தது இப்படிப்பட்ட சூழலில் எந்த ஒரு நிறுவனமும் எதிர்பார்க்காத ஒரு செயலை Netflix நிறுவனம்.
இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது முதல்முறையாக இணையதளம் மூலமாக Netflix நிறுவனத்துடைய வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மூலம் நேரடியாக வழங்கத் தொடங்கியது மேலும் Netflix நிறுவனத்துடைய இந்த முயற்சி கடந்த 10 வருடத்தில் பத்தாயிரம் மடங்கு முதலீடுகளை Netflix நிறுவனத்திற்கு வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.