MasterCard இந்தியாவில் தடை செய்யப்படுமா
MasterCardடைப்பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பாக இந்தியாவில் 70 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த MasterCard ஐ பயன்படுத்தி வருகிறார்கள் இப்படிப்பட்ட நேரத்தில் RBI அதாவது Reserve Bank Of India சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது MasterCard இந்தியாவில் தடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஒரு தகவல் வெளியானது மேலும் இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம் 2018 ஆம் ஆண்டு RBI புதிய நடைமுறையை கொண்டு வருகிறது இதன்படி MasterCard நிறுவனம் இந்திய மக்களின் தரவுகளை இந்தியாவிலே சேமிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது
ஆனால் MasterCard அந்த அறிவிப்பை இன்று வரை சரியாக பின்பற்றவில்லை இதன் காரணமாகவே RBI இந்தியாவில் MasterCard நிறுவனத்தின்மீது தடை விதிக்கிறது MasterCard நிறுவனமானது வாடிக்கையாளர்கள் உடைய தரவுகளை எந்த இடத்தில் சேமித்து வைக்கிறது Foreign Card Network என்ற ஒரு நிறுவனத்தின் கூட இணைந்து பயனாளர்கள் தரவுகளை சேமிக்கிறது.
இனிமேல் இந்தியாவில் MasterCard பயன்படுத்தலாமா
அதாவது RBI வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது வரை பயன்பாட்டில் இருக்கும் பழைய வாடிக்கையாளர்கள் உடைய MasterCard ஐ காலாவதியாகும் வரையில் எப்பொழுதும் போல வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இனிமேல் வரக்கூடிய நாட்களில் புதிதாக MasterCard அப்ளை செய்து வாங்க முடியாது தற்போதுவரை RBI இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
கூடிய விரைவில் MasterCard நிறுவனம் இதற்கு ஒரு தீர்வை கண்டறிவார்கள் என்று எதிர்பார்க்கலாம் ஏனென்றால் இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது இந்த MasterCard இதன்படி RBI உடைய அறிவிப்பை பின்பற்றுவார்கள் என்று எதிர் பார்க்கலாம் நன்றி...