Spyware என்றால் என்ன
Spyware என்பது வேவு பார்க்கும் மென்பொருளாகும் இந்த மென்பொருளை உங்களுடைய மொபைல் போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து உங்கள் அனைத்து தகவல்களை பதிவிறக்கம் செய்யப்பட்ட நபரால் கண்காணிக்க முடியும்.
பொதுவாக வேவு பார்க்கும் மென்பொருளில் பல நிலைகள் உள்ளது சாதாரண புரோகிராம் தெரிந்த ஒரு நபர் உங்களுடைய மொபைல் போனை வேவு பார்க்க வேண்டுமென்றால் சாதாரண குறுஞ்செய்தி போன்ற ஒரு link கை முதலில் அனுப்புவார்கள் அந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தவுடன் ஒரு file உங்களுடைய மொபைல் போனில் உள்ள Android setup கூட இணைந்துவிடும் அந்த file லை சாதாரணமாக பயன்படும் antivirus ஆல் கூட கண்டுபிடிக்க முடியாது
இதுபோன்ற Spyware இடம் இருந்து நம்மளுடைய மொபைல் போனை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது
ஒருவர் உங்களுடைய மொபைல் போனை உளவு பார்க்க வேண்டுமென்றால் முதலாவதாக அவர் புரோகிராம் செய்யப்பட்ட file லை உங்களுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் ஆனால் ஒரு சாதாரண Hacker க்கு அது மிகவும் கடினமான ஒரு விஷயம் முதலில் நீங்கள் யார் எப்படிப்பட்ட நபர் என்று கண்டறிவார்கள் பிறகு உங்களுடைய தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்து அதன் மூலமாக லிங்கை முதலில் அனுப்புவார்கள் அனுப்பப்பட்ட link கை நீங்கள் தவறுதலாக கிளிக் செய்துவிட்டால் உங்க மொபைல் போன் உடைய மொத்த Access அவர்களிடம் சென்று விடும் உங்களுடைய மொபைல் போன் உளவு பார்க்கப்படுகிறது என்று எப்படி கண்டறிவது முதல் அறிகுறி வழக்கத்துக்கு மாறாக பேட்டரி உடைய திறன் குறையும் இரண்டாவது அறிகுறி சாதாரண நேரங்களில் பயன்படுத்தாத போது தானாகவே மொபைல் போன் வெப்பமடையும் மூன்றாவது அறிகுறி உங்களுடைய மொபைல் internet பயன்படுத்தாத போது அதிவிரைவாக தீர்ந்துவிடும் இதேபோன்று வழக்கத்திற்கு மாறாக உங்களுடைய மொபைல்போன் செயல்பட்டால் உடனடியாக மொபைல் போனை format செய்வது மிகவும் நல்லது இதுபோன்ற Spyware இடமிருந்து தப்பிக்க தேவையில்லாத இணைய தளத்துக்கு செல்வது மற்றும் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு வரும் குறுஞ்செய்தி உண்மையான தகவல் தானா என்று அறியாமல் வரக்கூடிய லிங்கை கிளிக் செய்தாள் இதுபோன்ற Spyware தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.