ரேடியக்கதிர் அறிமுகம்:
உலகில் தலைசிறந்த பெண் விஞ்ஞானியாக சொல்ல வேண்டுமானால் உடனே நம் நினைவுக்கு வருபவர் போலந்து பெற்றெடுத்த பெண்மணி மேடம் மேரி கியூரி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை.
மேடம் மேரி கியூரி
இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளை நீடித்துக் கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணமானவர் மேரி கியூரி Marie Curie. ஆம் இவர் தன் உயிரை பணயம் வைத்து கண்டுபிடித்த ரேடியக்கதிர்களே கொடுமையான புற்றுநோயை உடலிலிருந்து அகற்றும் மகத்தான மாமருந்தாக பலகோடி பேரை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது நம் ஊரில் சாதாரண டிகிரி படித்துவிட்டாலே ஏதோ மாபெரும் சாதனை படைத்துவிட்டதாக கருதி கர்வத்தோடு அலைகிறார்கள்.
பௌதீகத்திலும், கணிதத்திலும் படித்து பல்கலைக்கழகத்திலேயே முதல், இரண்டாம் இடங்கள் பெற்றும், எம்.எஸ்சியில் முதலிடம் பெற்றும். டாக்டர் பட்டத்திலும் முதலாவதாக வந்தும், பௌளதீகத்திற்காக ஒன்றும், வேதியலுக்காக இன்னொன்றுமாக இரண்டு நோபல் பரிசுகள் பெற்றும் அடக்கமாகவே இருந்திருக்கிறார் தான் கண்டுபிடித்த ரேடியக் கதிர்களால் கோடிக்கணக்கான வருவாய் வரும் என்று தெரிந்திருந்தும் அதை பணத்திற்கு விற்காமல் மக்களுக்கான இலவச மருத்துவமாகவே வழங்கியிருக்கிறார்.
மேரி கியூரி இளமைப் பருவம்:
மேரி கியூரி என்றால் அவரின் பெருந்தன்மையை என்னவென்று பாராட்டுவது பிறரால் பாராட்டப்பட வேண்டும், அன்றாடம் புகழப்பட வேண்டும். தன் பெயரை மக்கள் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் அமைதியாக மக்களின் நல்வாழ்விற்காக. சுமார் 40 ஆண்டுகள் சோதனைச்சாலையில் வாழ்ந்த மகத்தான பெண்மணியான Curie அவர்கள் அப்போது ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த போலந்து நாட்டில் வார்சா என்ற நகரில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த வ்லாடிஸ்லாவ் ஸ்க்லோமா வ்ஸ்சிபிரோ நிஸ்லாவா தம்பதிகளுக்கு கிபி1867-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் மான்யா மேரி கியூரி பிறந்தார்.
இவருக்கு முன்னர் ஜோசப் என்ற அண்ணனும், ஜோசியா பிரோன்யா, ஹெலா என்ற மூன்று தமக்கைகளும் இருந்தனர் மான்யாவின் தந்தை வார்ஸா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் பௌதீகம் கற்பித்து வந்தார். தாய் ஒரு பள்ளி ஆசிரியையாக இருந்தார் பெற்றோர்கள் நன்கு கற்றவர்கள் என்பதால் தங்கள் ஐந்து பிள்ளைகளும் நன்கு கற்க வேண்டும் என்று விரும்பினார்கள். கடைக்குட்டிப் பெண்ணான மான்யா மீது அனைவரும் மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருந்தனர்.
மான்யா தன் அக்காள்களும், அண்ணனும் படிப்பதை கூர்மையாக கேட்பாள். அவருக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போதே ஜோசியா தங்கைக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க அக்காள் சொல்லிக்கொடுப்பதை உடனே திரும்ப சொல்லும் திறமை பெற்றிருந்ததைக் கண்டு பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர் போலந்து ரஷ்யாவின் பிடியில் இருந்ததால் குடும்ப வருவாய் குறைவாகவே இருந்தது என்றாலும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
மான்யாவின் தாய் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் பிள்ளைகளை அன்போடு கவனித்துக் கெண்டாள். தனது 10 வயதில் மான்யா ஜேசி கொர்ச்கா என்ற பள்ளியில் சேர்ந்தாள். பள்ளியில் மிகுந்த ஆர்வத்தோடு படித்தாள். வகுப்பில் அவள்தான் முதல் மாணவி அவள் தாய்மொழியான போலந்து. திணிக்கப்பட்ட மொழியான ரஷ்யன், ஜெர்மன் மொழிகளை நன்கு கற்றாள். சக மாணவ மாணவிகளுக்கு தெரியாததை அவள் சொல்லிக் கொடுத்தாள் அச்சிறுவயதிலேயே பிறர் மேல் அன்பும், பிறருக்கு உதவும் நற்குணமும் அவளிடமிருந்தது.
கி.பி 1876-ல் மூத்தவள் ஜோசியா இறந்தது மான்யாவை மிகவும் வேதனைப்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் நோய் முற்ற கிபி1878-ஆம் ஆண்டு தாயின் இறப்பு மான்யாவை துயரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. கிபி1883-ஆம் ஆண்டு பள்ளி படிப்பை தங்க பதக்கத்தோடு முடித்தாள்.
ரேடியம் ஆராய்ச்சி :
மான்யாவின் தந்தை தன் மகன் ஜோசப், பிரோன்யா, கடைசி மகள் மான்யா மூவரும் பள்ளி இறுதித் தேர்வில் தங்கப்பதக்கங்கள் பெற்று தன் குடும்பத்திற்கு பெருமை சேர்த்ததை எண்ணி மகிழ்ந்தார். மேற்கொண்டு படிக்க ஆவல். ஆனால் குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை. பிரோன்யாவிற்கு மருத்துவம் படிக்க ஆசை. மான்யா தமக்கையின் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். தாயும், தமக்கையும் இறந்த பின் தன்னை மிகவும் அன்போடு பார்த்துக் கொண்டவள்.
அக்கா நீ விரும்பியபடி பாரீஸ் சென்று மருத்துவம் படி. எனக்கு 17 வயதுதான் ஆகிறது. உனக்கு 21 வயதாகிவிட்டது. நான் சம்பாதித்து உனக்கு பணம் அனுப்புகிறேன். நீ படித்து முடித்து வேலைக்கு சேர்ந்ததும் என்னை படிக்க வை என்றார் மான்யா தங்கையின் பெருந்தன்மையை உணர்ந்து நெகிழ்ந்தாள் பிரோன்யா. தந்தையும் இதற்கு இசைவு தெரிவித்தார்.
பிரோன்யா பாரீஸ் சென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தாள். மான்யா தன் ஊரிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள ஒரு செல்வந்தர் வீட்டு இரு பெண்களை பார்த்துக் கொள்ளவும், பாடங்கள் சொல்லிக் கொடுக்கவும் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சேர்ந்தார். அக்காவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பினாள். மூன்றாண்டுக்குப்பின் பிரோன்யா பணம் அனுப்ப வேண்டாம் என்றாள். மான்யா மூன்றாண்டு ஒப்பந்தம் முடிந்ததும் வார்சா திரும்பினார் கிபி1891-ஆம் ஆண்டு மான்யா மேற்படிப்பிற்காக பாரீஸ் சென்றாள்.
பெண்களை கல்லூரியில் சேர்க்காத காலம். இவள் அங்கு சோர்பான் பல்கலைக்கழகத்தில் (இப்பல்கலைக்கழகம் கிபி1295-ல் துவங்கப்பட்டது) இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பயின்றார். அக்கா வீட்டில் சில காலம் தங்கி விட்டு தனியே எளிய வசதியில்லாத அறையில் தங்கினார். குறைந்த அளவே உணவு. அவருக்கு வசதிகளை விட உணவை விட படிப்பே பிரதானமாக இருந்தது. இரவு இரண்டு, மூன்று மணிவரை படித்தார்.
பணப்பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஓய்வு நேரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தி சம்பாதித்து தன் தேவைகளை கவனித்துக் கொண்டார் கிபி1893-ல் இயற்பியல் பாடத்தில் முதல் மாணவியாக பட்டம். மாலை நேரங்களில் பேராசிரியர் காப்பியலின் ஆய்வு கூடத்தில் வேலை செய்தார். அவருக்கு ஆய்வு கூடத்தில் வேலை செய்வது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. கிபி1894-ல் கணிதத்தில் இரண்டாவது மாணவியாக தேறி பட்டம் பெற்றார் அவருக்கு போலந்து சென்று ஆசிரியர் பணியாற்ற ஆர்வம் அதோடு ஆய்வு கூட பணியும் விருப்பமாக இருந்தது.
இந்த நிலையில் அவர் தன் வருங்கால கணவர் பியூரி curieயை சந்தித்தார். அவர் பௌதீக, வேதியியலில் ஆர்வம் கொண்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார். மிகவும் திறமைசாலியான அவர் மான்யாவை தன்னோடு ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இவரும், இவர் தம்பியும் சேர்ந்து எலக்ட்ரோ கிரேடிவிடி என்ற கருவியை கண்டுபிடித்தனர்.
மான்யாவை இனி marie என்றே அழைப்போம். (பாரீஸ் பல்கலைக்கழகத்தில் மான்யா என்ற பெயர் marieயானது). மேலி லிப்மென் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அவர் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆராய்ந்தார். பின்னர் curieயின் ஆய்வகத்தில் சேர்ந்தார். பின்னர் பியூரி curieயும். marieயும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஆதர்சதம்ப திகளாய் வாழ்ந்தனர் ரண்ட்ஜன் பெக்குரல் என்பவர் யுரேனியம் என்ற தாது உப்புகளும் எக்ஸ் கதிர்கள் போல கதிர்களை வெளியிடுகின்றன என்பதை கண்டறிந்தார். marieக்கு எக்ஸ் கதிர்கள் பற்றி ஆராய்வதில் நாட்டம் ஏற்பட்டது. அன்பு கணவரோடு சேர்ந்து கதிர்களின் ஆய்வில் இறங்கினார் கதிரியக்கத்தின் வெளிப்பாட்டு தன்மைகளை இருவரும் ஆராய்ந்தனர். இரவும், பகலும் ஆய்விலேயே இருவரும் காலத்தை கழித்தனர். நடுவே marie டாக்டர் பட்டமும் பெற்றார். புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ரேடியக்கதிர்களை கண்டறிந்த விஞ்ஞானி மேடம் மேரி கியூரி.
யுரேனியத்திலிருக்கும் சில தாதுகள் மின்சார உதவியின்றி தானாகவே கதிரியக்கத்தின் மூலம் சக்தியை வெளியிடுகின்றன என்பதை அறிந்த marieயும், curieயும் யுரேனியத்திலிருக்கும் பிட்ச்ப்ளென்ட் மூலம் புது தனிமத்தை கண்டறிய இரண்டாண்டுகள் பாடுபட்டு போலோனியம் என்ற தாதுவை கண்டுபிடித்தனர். இத்தனிம கண்டுபிடிப்பை உலகம் பாராட்டியது
பிட்ச்ப்ளென்ட்டிலிருந்து மற்றொரு தனிமத்தை கிபி1898-ல் கண்டுபிடித்தனர். (இது இன்றுவரை புற்றுநோயிலிருந்து மனிதர்களை காக்கிறது. இதற்கு ரேடியம் என்று பெயரிட்டனர்.
சாதனை விருது:
அடுத்த ஐந்தாண்டுக்கு பின் பெக்குரல், , மேரி கியூரி மூவருக்குமாக கதிரியக்க தனிமம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. marieயின் புகழ் ரேடியக்கதிரால் உலகப்புகழ் பெற்றது. ரேடியக்கதிரைக் கொண்டு தீராத தோல் நோய், புற்று நோய் ஆகியவைகளை குணப்படுத்தலாம் என கண்டறியப்பட்டது மருத்துவ உலகிற்கு marieயின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. குடும்பம் ஆய்வக பணிகளுக்கு இடையில் இரு மகள்களை பெற்றெடுத்தார், கணவர், குடும்பம் ஆய்வக பணிகளை அற்புதமாக செய்து வந்தார்.
கிபி1909-ஆம் ஆண்டு கணவர் பியூரி இறக்க marie மிகுந்த துயரம் அடைந்தார். தன் கணவரை மிகவும் ஆழமாக நேசித்தார். அவர் இறப்பிற்கு பின் எந்த ஆய்விலும் ஈடுபடவில்லை. marieயின் சாதனை பியூரியோடு போகக்கூடாது என பலர் வேண்ட.. மீண்டும் ஆய்வில் தீவிரம் ஆனார் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ரேடியக்கதிர்களை கண்டறிந்த விஞ்ஞானி மேடம் மேரி கியூரி கிபி1910-ஆம் ஆண்டு ரேடியத்தை பிரிப்பதில் சாதனை படைத்தார்.
அவரின் இந்த சாதனைக்காக கிபி1911-ஆம் ஆண்டு இரண்டாவது முறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரு முறைகள் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி. என பாராட்டப்பட்டார். பரிசுகள், பட்டங்கள் என இருந்தாலும் marie அவைகள் மேல் நாட்டம் கொள்ளாமல் புதிய கண்டுபிடிப்பிலேயே காலத்தைக் கழித்தார்.
மறைவு :
இருமுறை நோபல் பரிசு பெற்ற அந்த விஞ்ஞான மேதை ரேடியக்கதிர்களின் தாக்கத்தால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். என்றாலும் ஆய்வு கட்டுரைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் சொற்பொழிவு ஆற்றுவதிலும் தன் காலத்தை கழித்து வந்த அவர் கிபி1934-ஆம் ஆண்டு, ஜூலை 4-ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார் மேடம் curie என்று உலக மக்களால் போற்றப்படும் அவரின் இடைவிடாத உழைப்பு ஒவ்வொருவரும் பின்பற்றத்தக்க வாழ்வே ஆகும் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் 🙏