புவிஈர்ப்பு விசை அறிமுகம்:
புவிஈர்ப்பு விசையின் தந்தை என்று உலகமே போற்றும் தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஆவர். நாம் ஆப்பிள் தோட்டத்திற்கு செல்கிறோம். ஒரு மரத்தின் கீழ் அமர்கிறோம். ஒரு பழம் மரத்திலிருந்து கீழே விழுகிறது என்றால் என்ன செய்வோம் கீழே விழுந்த பழத்தை எடுப்போம். துடைப்போம். சாப்பிட்டுவிட்டு சென்று விடுவோம்.
ஆனால் அந்த இளைஞர் பழம் விழுவதை பார்த்து ஏன் பழம் கீழே விழுகிறது? மேலே ஏன் செல்லவில்லை என்று சிந்திக்கிறார். இதற்கு காரணம் புவிஈர்ப்பு விசைதான் என்று கண்டுபிடிக்கிறார். இதனை கண்டுபிடித்தவர் யார்?
விண்வெளியிலுள்ள பல அதிசயங்களை ஐநூறு வருடங்களுக்கு முன்பேயே கண்டுபிடித்துக் கூறியவர் யார்? வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை கூறிய மேதை அவர்.
2,40,000 மைல்கள் தொலைவிலுள்ள சந்திரன் விழாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்தவர் அவர். பூமியின் உண்மையான வடிவத்தையும், கடலில் ஏற்படும் அலையேற்றங்களையும் நன்கு ஆராய்ந்து கூறியவர் யார்? உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக என்றும் போற்றத்தக்க அந்த மாபெரும் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஆவார்.
ஐசக் நியூட்டன் இளமைப் பருவம்:
அவர் தன்னைப் பற்றி கூறும்போது நான் எதற்காக பிறந்துள்ளேன் என்ற உண்மை எனக்கு தெரியாது. ஆனால் கடற்கரையின் பரந்த வெளியில் அப்பாவித்தனமாக விளையாடும் ஒரு சிறிய குழந்தையின் செய்கையே என்னுடைய நடவடிக்கையும், அலைக்கழிக்கும் மனதுடன் சாதாரண கூழாங் கற்களையும், விலை உயர்ந்த சிப்பிகளையும் அடிக்கடி கண்டெடுக்கிறேன்.
ஆனால் கடலைப்போன்ற பரந்த உண்மைகள் என்னெதிரில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறது என்றார். அதாவது கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்து, கடுமையாய் உழைத்த அந்த விஞ்ஞான மேதை இங்கிலாந்தில் லிங்கன்வஷயரில் உல்ஸ்தார்ப் என்ற சிற்றூரில் கிபி1642-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐசக் நியூட்டன் பிறந்தார்.
இவர் பிறக்கும் முன்பே தந்தை இறந்துவிட்டார். அவருக்கு மூன்று வயதிருக்கையில் தாயார் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அவள் மகனை வளர்க்க தன் தாயிடம் விட்டு வைத்தார். பாட்டி வீட்டில் வளர்ந்த அவர் பள்ளிப்பருவம் வந்ததும் பொது பள்ளிக்கு அனுப்பப்பட்டார். சுமாராகவே படித்தார். அவர் ஓய்வு நேரங்களில் பொம்மைகள் செய்வதில் பொழுதை கழித்தார்.
நியூட்டனின் கண்டுபிடிப்புகள் :
தன் பள்ளியின் அருகிலிருந்த காற்றுத்தொழிற்சாலையை சுற்றிப்பார்த்த அவர் தானும் அதுபோல் நிர்மாணிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான திட்டத்தை சிறு வயதிலேயே வரைந்து வைத்தார். சரியாக நேரம் காட்டும் நீர் கடிகாரத்தை தயாரித்தார்.
அவரின் அறிவியல் ஆர்வத்தை பலர் பாராட்டினர் அவருக்கு 14 வயதிருக்கையில் தாயின் இரண்டாவது கணவர் இறக்க, அவர் மகனை அழைத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு சென்றார். குடும்ப ஏழ்மையை அறிந்த Newton வயல் வேலைக்குச் சென்றார். ஓய்வு நேரங்களில் வானத்தை நோக்குவதும், கணித புதிர்களை போட்டுப் பார்ப்பதும், நீர் கடிகாரங்களை தயாரிப்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
புவிஈர்ப்பு விசை பற்றிய ஆராய்ச்சி :
தன் மகனின் அறிவியல் திறமையை கண்ட தாய் தன் குடும்ப வறுமையை பற்றி கவலைப்படாமல் அவனை 18 வயதில் கிபி1660-ல் கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிடி கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் சேர்த்தார். அவரின் அறிவியல் திறமையைக் கண்ட கல்லூரி அவருக்கு உதவித் தொகை வழங்கியது. கிபி1667-ல் கல்லூரி ஆராய்ச்சி மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரின் தனித்திறமையை அறிந்த கல்லூரி, கிபி1669-ல் 27-ம் வயதில் லுகேசியன் கணித பேராசிரியராக பல்கலைக்கழகம் அவரை நியமித்தது கணித ஆசிரியராக இருந்தாலும் விண்வெளி ஆய்வில் ஈடுபாடு காட்டினார். அவர் கண்டுபிடிப்பில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது ஒளியின் கூட்டமைப்பு பற்றிய ஆய்வாகும்
பல வண்ணங்களினால் உருவாக்கப்படுகிறது என்று ஆராய்ந்து கூறினார். வானவில் என்பது மழை நீர்த்துளிகளால் சூரிய ஒளியில் உருவாகும் நிறப்பிரிகையினாலேயே உண்டாகிறது என்று கூறி உலகை வியக்க வைத்தார். பின்னர் இவரின் கவனம் புவிஈர்ப்பு பற்றிய ஆய்வில் திரும்பியது. ஆப்பிள் விழுவது புவிஈர்ப்பு விசையினால் என்பதை உணர்ந்த அவர் வானிலிருந்து கீழே விழும் ஒரு பொருள் தரையை அடைகின்றபோது அதன் திசைவேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்
வானவில் என்பது மழை நீர்த்துளிகளால் சூரிய ஒளியில் உருவாகும் நிறப்பிரிகையினாலேயே உண்டாகிறது.
ஐசக் நியூட்டனின் சாதனை
2.40,000 மைலுக்கு மேலுள்ள நிலவு பூமியில் விழாமல் இருப்பதற்கு பூமியின் ஈர்ப்பு விசை மற்றொன்று அதை எதிர்க்கும் விசை என்றார் Newton இந்த இரு விசைகளும் சமநிலையில் இருப்பதாலேயே நிலவு கீழே விழாமல் சுழல்கின்றது என்றார். அடுத்து சூரியனுக்குள் அடங்கியிருக்கும் விசையைப் பற்றி ஆராய்ந்தார். மேலும் கிரகங்களுக்கிடையே ஏற்படும் விசைகள் பற்றி புத்தகமாக எழுதினார். கி.பி1687-ஆம் ஆண்டு முதல் கொள்கைகள் என்ற அருமையான நூலை எழுதினார். இப்புத்தகம் உலக புகழ்பெற்ற நூல்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது கி.பி. 1688-ல் பல்கலைக்கழகம் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரானார். புகழ் பெற்ற ராயல் சொசைட்டியில் தொடர்ந்து பதவி வகித்தார்.
இவரின் அறிவியல் சாதனையை பாராட்டி ராயல் சொசைட்டியின் தலைமை பதவி கொடுக்கப்பட்டது. 25 ஆண்டுகள் பதவி வகித்தார் . இதனால் அவர் பெரும்புகழும் பெற்றார். ஆனாலும் அடக்கமாகவே இருந்தார். கி.பி1705-ல் இங்கிலாந்தில் கௌரவ பட்டமான நைட்வுட் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வானவியல் பேராசிரியராகவும் இருந்தார்.
நியூட்டனின் மறைவு :
இவர் 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டு எழுதிய நூலை வளர்ப்பு பூனை தள்ளிவிட அது எரிந்து சாம்பலானது அதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் எழுதி முடித்தார். மிகச் சிறந்த விஞ்ஞானியும், மனித நேயம் கொண்டவருமான Newton 1727- ஆம் ஆண்டு, மார்ச் 25-ம் நாள் மண்ணுலகை விட்டு விண்ணுலக ஆராய்ச்சிக்கு சென்றார். இன்றைய வானியல் ஆய்வுக்கு பெரும் பங்காற்றிய அவரை நாம் என்றென்றும் வணங்கி நிற்போம் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.