அணுவியல் அறிமுகம்:
அணுவியல் என்றாலே உலகம் முழுவதும் தெரிந்த பெயர். உலகமே தலைமீது வைத்துக் கொண்டாடும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள். இந்த விஷயத்தில் இயற்பியலாளரான நீல்ஸ் ஐன்ஸ்டீனை விட பல மடங்கு உயர்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அணுக்கொள்கைக்குஅடையாளமான குவாண்டம் தியரியில் இவரின் பங்கானது அளப்பரியது.
ஓர் அணுவில் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்று சில அணுக்கூறுகள் இருக்கின்றன. இவைகளில் எலக்ட்ரான் மட்டுமே ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அசைந்து கொண்டே இருக்கும் இந்த எலக்ட்ரான் பற்றி ஐன்ஸ்டீன், எலக்ட்ரான் ஆனது ஒழுங்கான முறையில் சீராகத்தான் நகர்ந்து கொண்டே போகும் இதனை மனிதனால் அளவிட முடியாது என்று கூறினார்.
ஆனால் Niels Bohrரோ எலக்ட்ரான் ஆனது ஓரிடத்தில் நிலையின்றி அங்குமிங்கும் வேகமும், திசையும் மாறி மாறி அலைந்து கொண்டேயிருக்கும். சிரின்றி இருக்கும். மனிதனால் அளக்க முடியாது என்றார்
இரண்டு பேரின் கருத்து மோதல்களின் இறுதியில் நீல்ஸ் போரின் கருத்தே சரியானது என ஏற்றுக் கொள்ளப்பட்டது
நீல்ஸ் போர் இளமைப் பருவம்:
அணுவியல் விஞ்ஞானியான Niels Bohr டென்மார்க்கில் 1885 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் பிறந்தார். தந்தையார் கிறிஸ்டியன் போர் கிறிஸ்தவ பிரிவில் லுத்துரன் சபையை சேர்ந்தவர் உலகப்புகழ்பெற்ற கோப்பன் ஹெகன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் பேராசிரியராக இருந்தார் தாயார் எல்லென் நீ அட்லர் போர் செல்வாக்கு மிக்க யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்கு படித்தவர்.
பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்பே அவருக்கு அறிவியலில் விருப்பம் ஏற்பட்டது. இவரின் பெற்றோர் மகனுக்கு அறிவியல் ஆர்வத்தை மூட்டினர்
ஏழாம் வயதில் கேமல் ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து 1903-ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார். பள்ளியில் அவருக்கு கணிதவியல், இயற்பியலில் நாட்டம் ஏற்பட்டது. தந்தை பணியாற்றும் கோப்பன்ஹெகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் பிரிவில் சேர்ந்தார்.
அவர் ஓய்வு நேரங்களை வீணாக கழிக்காமல் பல்கலைக்கழக ரசாயனக் கூடத்தில் உதவியாளராக செயல்பட்டார் இவ்வாறு அவர் செயல்பட்டதால் ஆய்வு குறித்த நிகழ்வுகளை நன்கு அறிந்து கொள்ள உதவியது. அவரின் எதிர்கால அணுவியல் ஆய்வு உதவியது அப்பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் சென் என்பவரின் கீழ் இயற்பியல் படிப்பை முடித்தார். 1911-ல் இயற்பியலில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பட்டம் பெற்றார்.
அதே கால கட்டத்தில் அவர் ஹரால்டு ஹோர்டிங் என்ற பேராசிரியரின் கீழ் மெய்யியல் பட்டப் படிப்பையும், தோர்வாடு தீலே என்ற பேராசிரியரின் கீழ் வானவியல், கணிதவியல் படிப்பையும் படித்து முடித்தார் பட்டப்படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அணுவியல் பற்றிய ஆராய்ச்சி:
1913 ஆண்டு புகழ்பெற்ற அணுவியல் விஞ்ஞானியின் ஆய்வுகளின் அடிப்படையில் அணுக்களின் உள் இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றி வருகின்ற வடிவமைப்பை 1913-ல் முதன்முதலாக போர்மாடல் எனும் கொள்கையை வெளியிட்டார்.
1914 முதல் 1916 வரை இரண்டாண்டுகள் விக்டோரியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். குவாண்டம் கொள்கை அணுவியலுக்கு மிகவும் அடிப்படையானது இக்கொள்கைக்கு அடிப்படையான கருத்தியலை இவர் ஆய்வு செய்து முதன் முதலாக கூறினார் குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியின் தன்னுள்ளிருக்கும் ஒன்றை உமிழ்ந்து விட்டு தனக்கு கீழுள்ள ஆற்றல் வலையத்தில் தாவும்.
சாதனை விருது:
இந்த நிகழ்வானது ஓர் எதிர் மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்திலிருந்து தான் செல்லும் இதுதான் குவாண்டம் கொள்கையின் அடிப்படை கூறாகும். அணுவின் அமைப்பு பற்றி ஆய்வு செய்து விளக்கி கூறியமைக்காக அவருக்கு 1922-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பெருமை வாய்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது அப்போது அவரின் வயது 37 மட்டுமே.
1926-ஆம் ஆண்டு கோப்பன்ஹெகன் பல்கலைக்கழகத்தில் கருத்தியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார். 1962-வரை தான் இறக்கும் வரை பணியாற்றினார். 1930-ஆம் ஆண்டு அவர் அணுக்கருவின் உட்கருவும் அவற்றின் பொருள் நிலை மாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றியும் ஆய்வு செய்து வெளியிட்டார் இந்த ஆய்வின் மூலம் அவர் அணுவியலுக்கு பெரும் ஆய்வு தூண்டுதலை ஏற்படுத்தி புகழ் பெற்றார்.
இவர் அணுசக்தியை ஆக்கபூர்வமானதாக மனித சமூகத்திற்கு பயன்படும்படியாக அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டார், இரண்டாம் உலகப்போரில் அணுவை (குண்டாக மாற்றி) பயன்படுத்தி பல லட்சம் மனிதர்களை கொன்றதை கண்டு வேதனைப்பட்டார்.
விஞ்ஞானிகள் பிளாக்கின் துகள்கள் தொகுதி ரூதர் ஃபோர்டின் அணுவின் உட்கரு பற்றிய ஆய்வுகள் என்று அணுக்கருவியல் பற்றி ஓயாமல் ஆய்ந்து கொண்டே இருந்தார். இவரின் ஆய்வுகள் பற்றி நூல்களாக 115 வந்துள்ளன அணுவின் உட்கரு பிளவு, திரவ துளி கொள்கை என்று அணுவியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அணுவியலுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தார்.
நீல்ஸ் போர் மறைவு:
அணுவியலில் சாதனைகளை எட்டிய Niels Bohr 1962-ஆம் ஆண்டு , நவம்பர் 18-ம் தேதி தனது 77-ம் வயதில் தனது ஆய்வுகளை நிறுத்தினார். ஆனால் அவரின் விட்டுப்போன ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதே அவர் என்றும் வாழ்வார் என்பதை சொல்லாமல் சொல்லும் 1912ஆம் ஆண்டு மார்கரெட் நார்லர்டு என்ற பெண்ணை மணந்த அவருக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தன.
இரண்டு சிறு வயதிலேயே மறைந்தன, மற்ற நால்வரும் பல்வேறு துறையில் சாதனை செய்தவர்கள் ஒரு மகன் Niels Bohr 1975-ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்று தந்தைக்கு பின் சாதித்த தலையனாய் தந்தைக்கு பெருமை சேர்ந்தார். அமைதியை விரும்பிய அவர் மக்களை சாகடிக்கும் போரை விரும்பவில்லை, அதற்காக தான் அணுவியலை ஆராய்ச்சி செய்யவில்லை என்று கூறிய மாமேதையின் உடல் தான் இல்லை. அவரின் ஆய்வுகள் நம்மோடு என்றும் வாழும் மீண்டும் மற்றொரு சுவாரசியமான பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் 🙏