ஏ.சி என்கிற ஏர் கண்டிஷனர் அறிமுகம்:
கோடை என்றாலே வெப்பம் என்பது அனைவருக்கும் தெரிந்த எளிய விஷயம் கோடையில் தர்பூசணி இளநீர் முலாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு என பல பானங்கள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கும் ...
எத்தனை எத்தனை வகையான எவ்வளவு பானங்களை குளிர்ச்சியாய் ஜில் என்று பருகினாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை விட்டு அகலாது ...
வெயில் வெப்பத்திலிருந்து தப்பிக்க பணக்காரர்கள் ஊட்டி கொடைக்கானல் என்று குளிர்பிரதேசங்களை நாடிச் செல்வர்.
சிலர் அயல்நாடுகளுக்குச் செல்வர். வருடத்திற்கு வருடம் வெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை முடிந்தும் வெப்பம் குறைவதை காண்போம் கோடையின் 'வெப்பத்தை தவிர்க்க கைவிசிறி மின்விசிறி சற்றே உபயோகப்பட்டாலும் இன்றைய கோடையிலிருந்து மனிதர்களை காப்பது ஏ.சி. என்ற குளிர்சாதனப்பெட்டி என்கிற ஏர்கண்டிஷனர்.
இன்று ஏ.சி இல்லாத அலுவலகங்களையோ பைவ் ஸ்டார் ஓட்டல்களையோ திரை அரங்குகளையோ தொழிற்சாலைகளையோ அடுக்குமாடி கட்டிடங்களையோ காண்பது அரிது ஒரு காலத்தில் பணக்காரர்களிடமிருந்த ஏ.சி. இன்று ஓரளவு சம்பாதிக்கும் எளியோரிடமும் இருக்கிறது வெப்பத்திலிருந்து காப்பாற்றும் அற்புத கருவியான ஏ.சி.யை கண்டுபிடித்தவர் வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் ( Willis Haviland Carrier ) என்பவர் ஆவார்.
வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் இளமைப் பருவம்:
அமெரிக்காவின் அங்கோலா என்ற இடத்தில் 1876 - ஆம் ஆண்டு நவம்பர் 26 - ம் தேதி பிறந்தார் Willis சிறுவயதில் அவருக்கு இயந்திரங்களின் இயக்கங்களை பார்ப்பதில் ஆர்வம் அதிகம் சிறுசிறு இயந்திரங்களை அவரே இயக்கிப் பார்த்து மகிழ்ச்சி அடைவார் இயற்கையாகவே பொறியியல் நாட்டம் கொண்ட அவர் கார்னெல் பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுநிலைப்பட்டம் பெற்று வெளியே வந்தார் ஒரு புகழ் பெற்ற தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார் பழுதுபட்ட இயந்திரங்களை உடனுக்குடன் சீர் செய்வதில் திறமைசாலியாக இருந்த வில்லிஸின் திறமை வெளி உலகில் பரவியது.
நியூயார்க்கிலுள்ள புகழ் பெற்ற புத்தக நிறுவனம் ஒன்றில் பிரிண்டிங் இயந்திரம் அடிக்கடி பழுதாகி அந்த நிறுவனத்தை இம்சைப்படுத்தியது அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வில்லிஸை பற்றி கேள்விப்பட்டு அவரை தன் நிறுவனத்திற்கு அழைத்து இயந்திரத்தை காண்பித்தார்.
ஏர் கண்டிஷனர் கண்டுபிடிப்பபு;
நிறுவனத்திற்குள் நுழையும்போதே வெப்பத் தாக்குதலை உணர்ந்தார் Willis இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை ஆராய்ந்தார். அவைகள் இருப்பிடம் வெப்பத் தாக்குதலாலேயே பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவது வெப்பத் தாக்குதலால்தான் என்பதை அறிந்த அவர் அப்பகுதியில் வெப்பம் அதிகமாய் தாக்காதவாறு இருக்கும்படியான உபகரணங்களை உருவாக்கினார் அந்த உபகரணங்களை அவர் தொழிற்சாலை முழுக்க பொருத்தினார் இதை அவர் செய்த ஆண்டு 1902. அப்போது அவரின் வயது 26 மட்டுமே.
அதாவது வெப்பக்காற்று உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு மெல்லியதான ஈரக் காற்றால் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டதால் அவைகள் பழுதின்றி சுழன்றன. அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமுமே இயந்திரங்களை பழுதாக்குகின்றன என்பதை கண்ட அவர் மேலும் தீவிரமாக இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை தயாரித்தார்.
1906 - ஆம் ஆண்டு ஏர்கண்டிஷனர் என்று இன்று உலகம் முழுக்க அழைக்கப்படுகின்ற கருவியை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்றார். இந்தக் கருவியானது, வெளி வெப்பத்தை அறைக்குள் தடுப்பதோடு மட்டுமின்றி, ஏற்கனவே அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும் வெப்பத்தை குளிர்ந்த நிலைக்கு மாற்றும் அற்புதத்தை செய்து அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்' மாஜிக் கை உருவாக்கினார்.
வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் சாதனை;
இவர் உருவாக்கிய ஏ.சி.யானது பயன்பாட்டிற்கு வந்தபோது அவரின் புகழ் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது பல நிறுவனங்கள் ஏ.சி யை பயன்படுத்த விரும்பி அவரை அழைத்தன. மக்களின் வரவேற்பை உணர்ந்த Willis தனி ஏ.சி யூனிட்டை ஆரம்பித்தார் இதனால் பெருத்த லாபத்தை அடைந்தார்.
தான் உருவாக்கிய ஏ.சி.யூனிட்களில் கம்ப்ரஸர்கள் அடிக்கடி பழுதாவதை கண்டார் ஏ.சி பணியாற்றும்போது வெப்ப நிலைக்கு ஏற்ப கம்ப்ரஸர்கள் செயல்புரிய வேண்டும் அதாவது வெப்பம் அதிகமாகும்போதும் , குறைகின்றபோதும் அறைக்குள் ஏ.சி.யின் குளிர் ஒரே அளவில் இருக்க வேண்டும்
இதை ஆரம்பத்தில் அவர் சரிவர இயங்கும்படி செய்யவில்லை. காலப்போக்கில் கம்ப்ரஸர்கள் அறையின் குளிர் அளவை தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளும்படியாக செட் செய்து செயல்படுத்தினார்.
இந்த செட்டிங்கை அவர் 1914 - ஆம் ஆண்டு உருவாக்கி அதற்கும் காப்புரிமை பெற்றார். இதற்குப் பின்னர் ஏ.சி.யை மேம்படுத்துவதிலேயே தன் சிந்தனையை செலுத்தினார்.
இன்று ஏ.சி.'யில் எத்தனையோ வகைகள் எத்தனையோ மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன பல்வேறு கம்பெனிகள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவ மாற்றங்களை வியாபாரத்திற்கு கொண்டு வருகின்றன.
வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் மறைவு:
இன்று ஏ.சி. மனிதனின் வசதிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு துறைகளுக்கும் உதவுகின்றன. மக்களுக்கு என்றென்றும் உபயோகமாகும் ஏ.சி.யை இவ்வுலகிற்கு தந்த Willis 1950 - ஆம் ஆண்டு அக்டோபர் 7 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். ஏ.சி.யை ஆன் செய்யும் ஒவ்வொருவரும் வில்லிஸை நினைத்து செய்வது அவருக்கு நாம் செய்யும் உன்னத அஞ்சலியாகும். நன்றி வணக்கம்.