லேசர் பயன்பாடு:
இன்று மருத்துவ உலகில் மிகவும் பயனுள்ள ஒன்று லேசர். அறுவை சிகிச்சைகளில் மிகவும் பயன்படும் அற்புதமான கருவி. பல அறுவைகள்' லேசரை'க் கொண்டே செய்யப்படுகின்றன. மூல அறுவை சிகிச்சை அதாவது சிலருக்கு வருடக் கணக்கில் மூலம் இருக்கும். மலம் கழிக்கையில் ரத்தம் கொட்டும். காரணம் அபானத்தை சுற்றி காது மடல்போல தொங்கும். இது மிகப் பெரிய வலியை கொடுக்கும். இதை 'கத்தி' யால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள். இன்னமும் சில மருத்துவமனைகளில் 'கத்தி'யே அறுவை சிகிச்சை கருவியாக இருக்கிறது. பல 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளில் இன்று 'லேசர்' அறுவை சிகிச்சைதான் 'அறுவைக்காக' பயன்படுத்தப்படுகிறது. மூலத்தை போக்க லேசர் இன்று எளிமை. 'கத்தி' போட்ட அறுவைக்கு பின்... புண் ஆறும்வரை மருத்துவமனையில் கிடக்க வேண்டும். 'லேசர்' சிகிச்சை முடிந்தபின் சில மணி நேரங்களில் 'வீடு' திரும்பி விடலாம். பார்வை குறைபாட்டை நிவர்த்தியாக்க இன்று 'லேசர்' வரப்பிரசாதம். இன்று கண்ணுக்குள் அறுவை சிகிச்சை எனில் லேசர்'தான் என்றாகி விட்டது.
இளமைப் பருவம்:
மருத்துவ உலகில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த லேசரை ( Laser Light Ampli fication by Stimulated Emission of Radiation ) கண்டுபிடித்த பல உயிர்களை காக்கும் அற்புதமான கருவியை உருவாக்கிய மகான் கோர்டன் கௌல்டு.( Gordon Gould ). இவர் 1920 - ஆம் ஆண்டு, ஜூலை 17 - ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்தார். இவரின் தந்தையார் ஒரு பத்திரிகை ஆசிரியர். அதன் பெயர் சபலாஸ்டிக் பப்ளிக் மேகஸின் பப்ளிகேஷன்ஸ் ( Sapholastic Public Magazine Publications, New York.) இளம் வயதில் இயற்பியலில் (பிசிக்ஸ் Physics) மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் ஒளியில் நிறமாலைகளில் மாறுபட்ட தோற்றங்களை பார்ப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்வியின் மேலும், அறிவியல் கருவிகளின் மீதும் நாட்டம் கொண்ட கோர்டன் யூனியன் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்று வெளியே வந்தார். அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஒளியியல் மற்றும் நிறமாலைத் துறையை தேர்ந்தெடுத்து புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முதுகலை பட்டம் பெற்று 'சிறப்புடன்' வெளியே வந்தார்.
அவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வருகையில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அவருக்கு 'போர்' விரும்பாத நிகழ்வாக இருந்தது. போரில் பல கோடி மக்கள் ( ராணுவ வீரர்கள் உட்பட ) இறக்கும் அராஜக நிலை ஏற்படுவது வேதனை தருவதாக இருந்தது. மேலும் விஞ்ஞானியாக இருந்தாலும் மக்களிடையே காணப்படும் ஏற்றத் தாழ்வை கண்டு பொருமினார். அரசாங்கமே ஒரு பகுதி மக்களை கோடீஸ்வரர்களாக வளர்த்து விடுவதும், மற்றொரு பகுதி மக்களை ஏழ்மையில் தள்ளுவதும் அவருக்கு வேதனையை தந்தது. போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த 1944-45 காலகட்டத்தில் அமெரிக்க அரசு விஞ்ஞானிகளை 'அணுகுண்டு’ தயாரிக்க ஒன்று கூட்டியதை இவர் விரும்பவில்லை. என்றாலும் அவர் வேண்டா வெறுப்பாக அணுகுண்டு திட்டத்தில் பணியாற்றி வந்தார்.
லேசர் கண்டுபிடிப்பு:
நாளடைவில் கோர்டன் கம்யூனிஸ்ட் கொள்கையுடையவர் என்பதை அறிந்த முதலாளித்துவ அமெரிக்கா அவரை அத்திட்டத்திலிருந்து நீக்கியது. அவருக்கு அதைப் பற்றிய கவலை ஏதுமில்லை. இதற்கு பிறகு சில காலம் இயற்பியல் துறையில் பணியாற்றினார். 1949 - ல் கொலம்பியா யூனிவர்சிட்டியில் ஆப்டிக்கல் அண்டு மைக்ரோவேவ் ஸ்பெக்டோஸ்கோபி துறையில் பணிபுரிந்தார். அங்குதான் 'லேசர்' பற்றிய புதிய சிந்தனையை வளர்த்துக் கொண்டார். இவர் தான் கண்டுபிடித்த 'லேசர்' பற்றிய குறிப்புகளை தனக்கு தெரிந்த உயர் அதிகாரியிடம் கொடுத்து வந்தார். 1957 - ல் லேசருக்கு பேட்டண்ட் ( காப்புரிமை ) கேட்டு விண்ணப்பித்தார். வேறு சில விஞ்ஞானிகளும் அதற்கு போட்டியிட்டனர்.
கோர்டன் சமர்ப்பித்த லேசர் பற்றின அறிவியல் உண்மைகள் அறிந்த பேட்டண்ட் நிறுவனம் 1960 - ல் அவருக்கு 'லேசர்' கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர் கோர்டன் கௌல்டு என்று காப்புரிமை வழங்கியது. எக்ஸ்ரே கதிர்களை போலவே லேசர் கதிர்களும் அறுவை சிகிச்சையில் பெறும் பங்காற்றுகிறது. லேசர் கண்டுபிடிப்பால் அவர் புகழ் உலகம் முழுக்க பரவியது . பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு பல விருதுகள் வழங்கி சிறப்பித்தன. மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை 'கத்திரியால்' வெட்டி ... அதற்கு மருந்திட்டு ... சிகிச்சை செய்வர். ஆறுவதற்கு பல காலம் ஆகும். ஆனால் லேசர் கதிரை கத்திபோல கூர்மையாக்கி பாதிக்கப்பட்ட பகுதியை எரித்து 'சாம்பலாக்கி' விடுவார். வலியோ ... உபத்திரவமோ இல்லை. செயற்கைக்கோள் தயாரிப்பில் லேசர் உதவுகிறது. லேசர் பிரிண்டரால் பிரதிகளை வேகமாய் எடுக்கலாம். 'லேசர் இல்லாத துறை இன்று இல்லை' என்ற அளவிற்கு அதன் பயன் பரவலாகி விட்டது.
மறைவு :
1967 - ல் புரூக்ளின் பாலிடெக்னிக்கில் பேராசிரியராய் சேர்ந்தார். 1968 - ல் லேசர் பேட்டண்ட் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 'லேசர்' மிக உயர்ந்த கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை. 'லேசரை' கண்டுபிடித்து மனித வாழ்க்கையை 'லேசாக்'கிய அந்த விஞ்ஞான மேதை 2005, செப்டம்பர் 16 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். என்னப்பா லேசரா ... சூப்பர் சிகிச்சைப்பா ' என்று மக்கள் பாராட்டும் லேசரை கண்ட மாமேதையை என்றென்றும் நினைப்போம்.