மரபியல் ஆய்வு:
ஒரு மனிதனுக்கு (ஆண் - பெண் யாராகவும் இருக்கலாம்) அறிவு, ஆற்றல், உடல் வலு (பலம்) நோய், நோயற்ற வாழ்வு, நற்குணம்... இவையாவும் மரபியல் ஜீன் வழியாக தலைமுறை தலைமுறையாக வருகிறது என்பதை உலகிற்கு முதன்முதலில் எடுத்துச் சொல்லியவர் கிரிகோர் ஜோஹைன்மெண்டல் என்ற மரபியல் ஆய்வு ஞானி ஆவார். இன்று 'ஜீன்' என்ற மரபியல் உலகெங்கும் மருத்துவ விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நீரிழிவு நோயானது... திடீரென்று ஒருவருக்கு வந்தாலும் நோயாளியின் முன்னோர் அப்பா! தாத்தா! முப்பாட்டன் எவருக்காவது அந்த நோய் இருந்திருப்பின்... அவர்களின் வாரிசான பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு என்று கூறியது தான் மரபியல் விதி இதை மெண்டல் விதிகள் என்று அழைக்கிறார்கள். புத்திசாலித்தனமும் இவ்வாறுதான் என்பதையும்' மரபியல் ரீதியாக' கண்டறிந்துள்ளனர்.
(உழைப்பின் மூலமும் வருவதுண்டு. மரபியல் விதிகளை வகுத்து மருத்துவ உலகின்றி புதுவழி காட்டிய மேதை கிரிகோர் ஜோஹைன்மெண்டல் அவர்கள்)
இளமைப் பருவம்:
1822- ஆம் ஆண்டு, ஜூலை 20 - ம் தேதி ஹைன்சென்டாஃப் என்ற ஊரில் பிறந்தார். நாடு ஆஸ்திரியா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் அவரால் பள்ளிக்கு உரிய காலத்தில் செல்ல இயலவில்லை. என்றாலும் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் அவர் தேனீக்கள் வளர்க்கும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை இல்லாத சமயத்தில் சில இடங்களில் தோட்ட வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பள்ளியில் படித்தார். உழைப்பும், படிப்புமாக உயர்நிலைப்பள்ளி படிப்பையும் முடித்த அவர் மேல்படிப்பை புனித தாமஸ் மடாலயத்தில் படித்தார். அவருக்கு அறிவியலில் மிகுந்த நாட்டம் இருந்தது என்றாலும் வறுமையான சூழ்நிலையை உணர்ந்த அவர் பாதிரியாக பணி மேற்கொண்டார்.
அவருக்கு சிறுவயதிலேயே இயற்கையின் மீதும், செடி, கொடி, மரங்கள் மீதும் தணியாத தாகம் ஏற்பட்டிருந்தது. 'பாதிரியாக' பணி முடிந்ததும் தோட்டத்திற்குள் புகுந்து விடுவார். மரங்களை ஆராய்ந்தார். ஒரு மரத்தின் கனி மற்றொரு மரத்தின் கனிக்கு வேறுபட்டிருப்பதை உணர்ந்தார். ஒன்று புளிக்கிறது, ஒன்று இனிக்கிறது, மற்றொன்று வேறு மாதிரி சுவை தருகிறது... இப்படி ஒவ்வொரு மரமும் வேறு வேறு சுவை தர காரணம் என்ன? என்று ஆராய ஆரம்பித்தார்.
கண்டுபிடிப்பு:
சுமார் 20.000 த்திற்கு மேற்பட்ட செடி. கொடி, மர வகைகளை எட்டு வருடங்களாக' தூங்காமல்' அல்லும், பகலும் ஆராய்ந்தார். அவரின் ஆராய்ச்சியின் முடிவில், அவர் கண்டது என்னவெனில்,
ஒரு மரத்தின் உயரம், இலைகளின் உருவம், பூக்களின் நிறம், கனிகளின் சுவை, விதைகளின் தன்மை, நீண்ட வருட வாழ்க்கை, ஆரோக்கியம்... வேர்களின் குணம் இவைகள் யாவும்... அவைகளின் முன்னோர்களிடமிருந்து பெற்றே வருகின்றன. நல்வளர்ச்சி பெறுகின்றன. நீண்ட வருடங்கள் வாழ்கின்றன.
அதாவது மரபியல் குணம் பெற்றே வாழ்வதாக ஆய்ந்து கண்டார். இதே குணங்களுடன்தான் மனித வாழ்க்கையும் அமைகின்றன... என்ற முடிவுக்கு வந்தார். பெற்றோர்களான தாய்... தந்தையரின் மரபியல் தன்மைக்கேற்பவே பிள்ளைகள் வளர்கின்றன என்றார். இந்த மரபியல் கோட்பாட்டை அவரின் காலத்து விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவே இல்லை... ஆம் உயிரியல் அறிஞர்கள் 'மெண்டலை' மெண்டல் (பைத்தியம்) என்றே கூறி அவமதித்தனர்.
மறைவு :
தன்னுடைய ஆய்வை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே என்ற வேதனை இருந்தாலும், மரபியல் - ஜீன் என்ற கோட்பாட்டை வரும் தலைமுறை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. தனது மரபியல் விதிகளை தொடர்ந்து ஆராய்ந்தவர் 1884 - ஆம் ஆண்டு, ஜனவரி 6 - ம் தேதி... தனது 61 - ம் வயதில் இம்மண்ணுலக வாழ்வை விட்டு மறைந்தார். அவர் மறைந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர், பார் பாரா மிக் கிளிண்டாக் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் 'மரபியல்' ஜீன் என்பது உயிரினங்கள் அனைத்திலும் உண்டு என்பதை மெய்ப்பித்தனர்.
இன்று மருத்துவ உலகில் 'ஜீன்' என்று தனிப்பிரிவே - தனித்துறையே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை வாழ்வில் 'ஜீன்' என்ற மரபியல் பெரும்பங்கு வகிப்பதாக இன்று அறுதியிட்டு கூறுகிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். இன்றைய மனித வாழ்க்கைக்கும், தாவரங்கள் மற்றும் உயிரின வாழ்க்கைக்கும் மரபியல் விதிகளை வகுத்துக் கொடுத்த கிரிகோர் ஜோஹைன்மெண்டலை என்றென்றும் நினைவு கூறுவோமாக.