ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் இளமைப் பருவம்:
இன்று லேப் ( Lab ) என்று சொல்லப்படும் பரிசோதனை நிலையங்களில் ஆப்டிக்கல் மைக்ரோஸ்கோப் என்ற கருவி இல்லாமல் இருக்காது ... பள்ளிகள் ... கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து காட்ட இக்கருவி பேருதவி புரிந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட திசுக்கள், ரத்த அணுக்கள், நுண்ணிய உயிரிகளை 'மைக்ரோஸ்கோப்' மூலம் கண்டு 'நோயின் தன்மை' அறிந்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உலகிற்கு மாபெரும் பரிசை வழங்கிய மேதை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் என்பவராவார். இவர் 1786 - ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள 'லண்டனில்' பிறந்தார்.
பள்ளிப் படிப்பின் மேல் ஆர்வம் இல்லாதவராய் இருந்தார் தனது 14 - ம் வயதில் ( 1800 ) பள்ளிப் படிப்பை விட்டு விட்டு தந்தையின் மதுபான கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். ஓய்வு நேரங்களில் 'கண்ணாடி'களில் சில கருவிகளை கொண்டிருப்பார். குவிலென்ஸ் இவைகளை வைத்து பொருட்களை பார்ப்பார்.
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் கண்டுபிடிப்பு:
ஒருமுறை நீண்ட குழாயின் மேலும் . கீழும் கண்ணாடிகளை பொருத்தினார். கீழே சிறு பூச்சியை வைத்து பார்த்தார். எறும்பு அளவில் இருந்த அது ஈ அளவிற்கு தெரிய ஆச்சர்யப்பட்டார். புதிய புதிய கண்ணாடி 'வில்லை' செய்து செய்து ஆய்வு வந்தார்.
தனக்கு முன்னர் பலர் தன்னைப் போலவே கண்ணாடி வில்லைகளை வைத்து ஆய்வு செய்திருந்ததை அறிந்தார். ஒருமுறை லிஸ்டர் ஒரு சிறுவன் தெருவில் சில பையன்களோடு ஒரு கண்ணாடியை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தார். அது வித்தியாசமானதாக இருப்பதாகப்பட்டது. அதில் கீழ்புறம் சதுரமான சிறு பலகை. அதன் ஓரத்தில் செங்குத்தான ஒரு குச்சி. அதன் நுனியிலிருந்து அரை அடிக்கு படுக்கைவாக்கில் ஒரு இடுக்கி போன்ற குச்சி .... அதிலிருந்து உருண்டையாக குழல். அதன் அடியில் சிறு கண்ணாடி வில்லை
பையன் எறும்பை நசுக்கி பார்த்துக் கொண்டிருந்தான். லிஸ்டர் பார்த்தார். எறும்பு அதே வடிவில் இருந்தது. அது சாதா கண்ணாடி 'வில்லை' என்பது தெரிந்தது. அவர் தனது பரிசோதனை நிலையத்திற்கு சென்று ... சிறுவன் வைத்திருந்த அமைப்பில் ஒரு ஸ்டேண்டை செய்து அதில் தான் புதிதாய் உருவாக்கிய கண்ணாடி வில்லையை வைத்து கடுகு அளவு பொருளை வைத்து பார்த்ததோடு அதிசயித்தார். ஆம் அது 1000 மடங்கு பெரியதாக தெரிந்தது . 1826 - ஆம் ஆண்டு விஞ்ஞானத்தின் புதிய மறுமலர்ச்சி துவங்கப்பட்டது. இந்த ஆண்டுதான் அவர் 'ஆப்டிக்கல் மைக்ரோஸ்கோப்பை' உருவாக்கினார்.
அதில் நுண்ணியவை பிரம்மாண்டமானதாக தெரிந்தது. உயிரியல், மருத்துவ பரிசோதனைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்ததால் ... அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. இவரின் மைக்ரோஸ்கோப் மூலம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், திசுக்கள், ரத்த அணுக்கள் போன்றவைகளை ஆராய்ச்சி செய்ய வழி அமைந்தது. மைக்ரோஸ்கோப் மூலம் முதன்முதலாக சிவப்பணுவை மற்றவர்களுக்கு காண்பித்து மருத்துவ துறைக்கு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் திசுக்களின் ஆய்வை மேற்கொண்டார். வெறும் கண்ணாடியில் என்ன சாதிக்க முடியும் என்று ஜோசப் லிஸ்டர் ஒதுங்கிப் போயிருந்தால் இன்று நாம் மைக்ரோஸ்கோப்பை கண்டிருக்க முடியுமா? இவரின் அற்புதமான கண்டுபிடிப்பை அறிந்த இங்கிலாந்து விஞ்ஞான ராயல் கழகம் அவரை 1832 - ஆம் ஆண்டு உறுப்பினராகச் சேர்த்து கௌரவித்தது.
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மறைவு:
தான் கண்டுபிடித்த நுண்ணோக்கியை மேலும் கூர்மையானதாக்க வேண்டும் என்ற நோக்கில் மேலும் மேலும் ஆய்வு மேற்கொண்டார். தனது 32 - ம் வயதில் 26 வயது இசபெல்லாவை மணந்தார். கணவனுக்கு ஏற்ற நல்மனைவியான அவர் கணவனின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்தார், அத்தம்பதிகள் நாலைந்து குழந்தைகளை பெற்றதாக வரலாறு. அற்புதமான கண்டுபிடிப்பை வழங்கிய அம்மேதை 1869 - ஆம் ஆண்டு, அக்டோபர் 24 - ம் தேதி அப்டன் நகரில் தனது 83 - ம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். மைக்ரோஸ்கோப் என்கிற நுண்ணோக்கியை பார்க்கும்போதெல்லாம் லிஸ்டர் நமது நினைவில் வந்தால் போதும். அவரின் கண்டுபிடிப்பிற்கு ஆத்மார்த்தமான அஞ்சலியாக அமையும்.