விமானம் அறிமுகம்:

இன்று பலகோடி மக்கள் விர்ரென்று விமானத்தில் பல நாடுகளுக்கு தொழில் சார்பாகவும், சுற்றுலாவும் செல்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தவர்கள் ரைட் சகோதரர்களாக உலக மக்களால் போற்றப்படும் ஆர்வில் ரைட் (ஆகஸ்டு -1873 ஜனவரி-30,1948) வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867-மே 30, 1912 ) என்ற இரு விஞ்ஞான மேதைகள் ஆவர்.

இளமைப் பருவம்:

Biography of Wright brothers (Orville Wright and Wilbur Wright) - விமானத்தைக் கண்டறிந்த மேதைகள் ரைட் சகோதரர்கள்-ஆர்வில் ரைட்/வில்பர் ரைட் வாழ்க்கை வரலாறு!!

 மில்ட்ன் ரைட் என் ஆங்கிலேயருக்கும், சுசான் கேத்ரின் என்ற ஜெர்மானிய சுவிஸ் மங்கைக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். இதில் வில்பர் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவில் உள்ள மில்வில்லே என்ற இடத்திலும், ஆர்வில் ஓகையோவின் டேட்டன் என்ற இடத்திலும் பிறந்தனர். ரைட் சகோதரர்களின் தந்தை சர்ச் ஆப் தி யுனைடெட் பிரத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக பணியாற்றினார். 

இறைபக்தி கொண்ட அவர் மனைவி, மக்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். வளர்ந்த பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர். ஆர்வில் பள்ளியில் குறும்புக்காரனாக இருந்தான். வில்பர் அமைதியாக இருப்பான். ஒருமுறை மில்ட்டன் மகன்கள் விளையாட ஹெலிகாப்டர் பொம்மையை வாங்கிக் கொடுத்தார். இருவருக்குமே அந்த பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை விந்தையாகவும், விசித்திரமானதாகவும் இருந்தது. இதை எப்படி தயாரித்திருப்பார்கள்? என்ற சிந்தனையில் இறங்கினார்கள். அவர்களின் விமான கண்டுபிடிப்புகளுக்கு திருப்புமுனையாக இருந்தது எனலாம்.

$ads={1}

1889 - ஆம் ஆண்டு இருவரும் இணைந்து அச்சகத்தை துவக்கினர். வார இதழை ஆரம்பித்தனர். மேற்கத்திய செய்திகள் என்ற பெயர் சூட்டினர். அடுத்த ஆண்டே தி ஈவினிங் ஐடெம் என்ற நாளிதழையும் துவக்கி நடத்தினர். அச்சகம் நல்ல நிலையில் நடந்தது. அதே ஆண்டில் (1890) ஜெர்மனியை சேர்ந்த ஓட்டோலிலியந்தால் என்பவர் கிளைடர் கருவி மூலம் இயந்திரம் ஏதுமில்லாமல் காற்றின் சக்தியால் வானில் பறந்ததை பற்றிய செய்தியை படித்து அதிசயித்தனர் ரைட் சகோதரர்கள். 

வானில் பறக்கும் ஒன்றை உருவாக்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். 1892 - ல் அச்சகம் நொடிக்க வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்த அவர்கள் மிதிவண்டி பழுது பார்க்கும் கடையை ஆரம்பித்தனர். கூடவே விற்பனையையும் துவக்கினர். மற்றவர்களின் தயாரிப்பை விற்பதை விட சொந்தமாய் மிதிவண்டி தயாரித்து விற்கலாம் என்று யோசித்த அவர்கள் 1896 - ல் மிதிவண்டிகளை தயாரித்து விற்றனர். அவர்கள் தயாரித்த மிதிவண்டிகள் நன்கு விற்பனை ஆகின. விற்பனையில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வானில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க செலவு செய்தனர். அதற்காக பறக்கும் இயந்திரம் பற்றிய நூல்களை வாங்கி படித்தனர்.

விமானம் கண்டுபிடிப்பு:

தங்களுக்கு முன் தங்களைப்போல வானில் பறக்கும் இயந்திரத்தை உருவாக்குபவர்களை பற்றி அறிந்து அவர்களை சந்தித்து அது பற்றி கேட்டறிந்தனர். தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். நான்கு ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் பறக்கும் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தனர். இவர்கள் மிதிவண்டி கம்பிகள், சக்கரங்கள், சிறிய அளவு மோட்டார்கள். சில இயந்திரங்கள் கொண்டே இருப்பதைக் கொண்டு வானில் பறக்கும் விமான இயந்திரத்தை தயாரித்தனர். விமானமானது முன் நோக்கி சென்று மேலெழுந்து பறப்பதை போன்ற அமைப்புகளை உருவாக்கினர். 

1903 - ஆம் ஆண்டு , டிசம்பர் 17 - ம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் 12 எச்.பி. ஆற்றல் கொண்ட ரைபிளேயர் என்ற பெட்ரோல் இயந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக பூமிக்கு மேல் 30 மைல் வேகத்தில் 12 விநாடிகள் 120 அடி தூரத்தில் பறந்த விமானத்தை பலர் முன்னிலையில் பறந்து காண்பித்து உலக சாதனை படைத்தனர். இரண்டு முறைகள் பறக்காது தொப்பென்று விழுந்த அந்த விமானம் மூன்றாவது முறை வானில் விர்ரென்று பறந்து இன்றைய விமானங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

பறவையை கண்டாள் விமானம் படைத்தான் என்றார். கவியரசர் கண்ணதாசன், ரைட் சகோதரர்கள் தந்தை வாங்கித் தந்த ஹெலிகாப்டர் மற்றவர் கண்டுபிடித்த சிளைடர் விமானங்களை முன்மாதிரியாக கொண்டு மனிதர்களையும் வானில் பறக்க வைக்கும் மிகச் சிறந்த உபகரணத்தை கண்டுபிடித்தனர். இவர்களின் கண்டுபிடிப்பைக் கண்டு உலகமே வியந்தது. இந்த கண்டுபிடிப்புக்கு பின்னர் நீண்ட தூரம் தொய்வில்லாமல் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்க இருவரும் தீவிரமாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1911 - ல் மாடல்பி என்ற மேம்படுத்தப்பட்ட விமானத்தை தயாரித்தனர். அது 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது.

$ads={2}

மறைவு :

இன்று லட்சக்கணக்கான மைல்கள் பறக்கும் விமானங்களுக்கு முன்னோடியாக அந்த விமானம் திகழ்ந்தது . 1912 - ல் வில்பர் தன் 45 - ம் வயதில் டைபாய்டில் இறக்க, ஆர்வில் மனமுடைந்தார். சில காலம் மௌனமாக இருந்தார். பின்னர் 1918 - ல் இன்னும் அதிக தூரம் பறக்கும் விமானத்தை கண்டார் ஆர்வில். இவரைக் கொண்டு அமெரிக்கா தரமான விமானங்களை தயாரிக்க முற்பட்டது. இவர் நாசா உட்பட பல விமான நிறுவனங்களுக்கு விமான ஆலோசகராக இருந்தார். புதிய விமானங்களின் ஆராய்ச்சிகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஆர்வில் 1948 - ல் மாரடைப்பால் மரணமடைந்தார். 

புதியன கண்டுபிடிப்பதற்காக தங்களை அர்ப்பணித்த ரைட் சகோதரர்கள் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளவில்லை. 19 - ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் பெயர்கள் விமானங்கள் இவ்வுலகில் பறக்கும்வரை இருக்கும் என்பதில் ஐயமில்லை. ரைட் சகோதரர்களின் உழைப்பைக் கண்டு நாமும் கடுமையாய் உழைத்து புதியன கண்டுபிடித்து உலகிற்கு வழங்குவோமாக!

Previous Post Next Post