HTML பற்றிய செய்தி
HTML ஐ கற்றுக் கொள்ள வேண்டுமெனில் , முதலில் உங்கள் கணிப்பொறி இணையத்துடன் எவ்வாறு ஊடாடுகிறது (interacts) என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 'Internet' என்னும் சொல் Interconnection மற்றும் Networks என்பதிலிருந்து உருவானதாகும். இதைச் சுருக்கமாக Net என்றும் அழைப்பர்.
இணையம் என்பது என்ன?
இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பாகும். இணையத்தில் நீங்கள் கணிப்பொறிகளைக் காணலாம். Web என்று அழைக்கப்படும் வைய விரி வலையில் (World Wide Web - WWW) ஏராளமான ஆவணங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
வைய விரி வலை என்பதே ஆவணங்களின் தொகுப்பாகும். இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த ஆவணங்கள் வலைப்பக்கங்கள் (Web pages) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வலைப்பக்கங்கள் HTML (HyperText Markup Language) எனப்படும் கணிப்பொறி மொழியில் எழுதப்பட்ட மின்னணு ஆவணங்களாகும். (Electronic Documents) இந்த வலைப்பக்கங்கள், வலைச் சேவையகங்கள் (web servers) எனப்படும் கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. நமக்குத் தேவையான பக்கங்களை, இந்த வலைச் சேவையகங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் URL (Uniform Resource Locator) எனப்படும் ஒரு தனித்த அமைவிட முகவரி உள்ளது. இதைப் பயன்படுத்தி இணைய உலவிகள் (Web browsers) வலைச் சேவையகங்களிலிருந்து உரிய பக்கத்தைப் பெற்று பயனர் பார்வையிட உதவுகின்றன.
→→learning to code←←
ஒரு வலையகத்தைப் பார்வையிட வேண்டுமெனில் முதலில் வலை உலவி, வலைச் சேவையகத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது. அவ்வேண்டுகோளைப் பெற்ற சேவையகமானது, உரிய வலைப்பக்கத்தை அக்கணிப்பொறிக்கு அனுப்பி வைக்கிறது. அக்கணிப்பொறி அத்தகவலை HTML வடிவில் பெற்றுக் கொள்கிறது. வலை உலவியானது, இந்தத் தகவலை மொழிமாற்றம் செய்து நாம் படிக்கும் வகையில் திரையில் காட்டுகிறது.
HTML என்பது என்ன?
→→Learn HTML←←
HTML என்பதன் விரிவாக்கம் HyperText Markup Language என்பதாகும். வலை உலவியின் (Web Browser) மூலம் இணையத்திலுள்ள வலைப்பக்கத்தைப் (website) பார்க்க HTML பயன்படுகிறது. வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தை HTML ஆனது குறி ஒட்டுகளின் (Tags) மூலம் விளக்குகிறது. குறி ஓட்டுகள் என்னும் குறியீடு மூலம் வரையறுக்கப்படுகின்றன. இந்தக் குறி ஒட்டு ( ) தொடக்கக் குறி ஒட்டு என அழைக்கப்படுகிறது. இந்தக் குறியீட்டுக்கிடையில் சேர்த்து முடிவுக் குறி ஒட்டு < > வரையறுக்கப்படுகிறது. ஒரு முழு HTML ஆவணம் <HTML> என்னும் தொடக்கக் குறி ஒட்டுடன் தொடங்கி, </HTML> என்னும் முடிவுக் குறி ஒட்டுடன் முடிவடைய வேண்டும். HTML ஆவணமானது .html அல்லது .htm என்னும் விரிவைக் கொண்டிருக்கும்.
HTML ஆவணம்(Electronic documents) உருவாக்குவதற்குத் தேவையான கருவிகள்:
HTML ஆவணம் உருவாக்குவதற்கு சிறப்புச் சாதனம் அல்லது சிறப்பு மென்பொருள் எதுவும் தேவையில்லை. HTML ஆவணத்தை மிக எளிதாக உருவாக்க முடியும். HTML குறிமுறை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட இரண்டு கருவிகள் மட்டுமே போதுமானது.
சொற்செயலி ( asimple - text editor ) எ.கா. Notepad.. வலை உலவி (web browser) எ.கா. Internet Explorer, chrome
உங்கள் கணிப்பொறியிலேயே உங்களால் வலைப்பக்கங்களை உருவாக்க முடியும். உங்கள் வலைப்பக்கத்தை வெளியிடுவதற்கு மட்டுமே ஆன்லைன் (online) வசதி தேவைப்படும்.
HTML ஆவணத்தின் அடிப்படைகள்:
குறி ஒட்டுகள் (Tags)
கணிப்பொறி "A" என்னும் எழுத்தை "A" என்று தான் பார்க்கும். அந்த எழுத்து தடிமனாக, சாய்வாக, சிறிய அல்லது பெரிய எழுத்துக்களாக இருப்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. "A" என்னும் எழுத்து தடிமனாக இருக்க வேண்டும் என உலவிக்குத் தெரிவிப்பதற்கு A க்கு முன்னால் ஒரு குறி ஒட்டைச் சேர்க்க வேண்டும். அதாவது <B>A</B> என்று எழுத வேண்டும். இந்தக் குறி ஒட்டிற்கு tag என்று பெயர்.
HTML ஆவணத்தில் பயன்படுத்தப்படும் குறி ஒட்டுகள், அனைத்து வலை உலவிகளிலும் ஒரே பொருளையே குறிக்கின்றன. HTML ஆவணத்தை உலவியில் பார்க்கும் போது நாம் எழுதிய குறி ஒட்டுகள் தெரிவதில்லை. ஆனால் அதன் விளைவுகள் தெரியும். ஒரு HTML குறி ஒட்டும், அது எவ்வாறு உலவியில் காட்டப்படுகிறது என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
HTML Code
I want to <B> emphasize </B> this!
Browser Display
I want to emphasize this!
$ads={1}
தொடக்கக் குறி ஒட்டு <B> யைத் தொடர்ந்து வரும் எழுத்துக்கள் தடிமனாகக் காட்டப்படும். </B> என்னும் முடிவுக் குறி ஒட்டு எழுத்துக்களைத் தடிமனாகக் காட்டுவதை முடிக்க வேண்டும் என்பதை உலவிக்குத் தெரிவிக்கிறது.
உறுப்பு (Element)
ஒரு உறுப்பு என்பது தொடக்க மற்றும் முடிவுக் குறி ஒட்டுகளைக் கொண்ட ஒரு முழுமையான குறி ஓட்டு ஆகும். ஒரு உறுப்பு, தொடக்கக் குறி ஒட்டு, உறுப்பின் பொருளடக்கம் மற்றும் முடிவுக் குறி ஒட்டு போன்ற மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது. ஒரு HTML உறுப்பிற்கான எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
<B> Hello </B>
பண்புகள் (Attributes)
குறி ஒட்டுகளின் தன்மைகளை மேலும் விளக்கிக் கூற பண்புகளைப் பயன்படுத்துகிறோம். HTML குறி ஒட்டுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளைச் சேர்க்க முடியும். ஒரு குறி ஒட்டில் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் அக்குறி ஒட்டு எவ்வாறு தெரிய வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவல்களை உலவிக்குத் தெரிவிக்க முடியும். பண்புகளின் பெயர் மற்றும் அதன் மதிப்பை சமக்குறியீட்டுடன் (=) கொடுக்க வேண்டும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
<BODY> என்னும் குறி ஒட்டு BGCOLOR என்னும் பண்புடனும், green என்னும் மதிப்புடனும் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். <BODY BGCOLOR="green">
(<tag_name attribute 1 = "value" attribute 2 = "value"...>)