சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்:
உருளைக் கிழங்கு சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். முகம் அழகாக மாறும். இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும். நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.
முட்டையின் வெள்ளைக் கருவை நுரை வரும் வரை அடித்து தடவி உலரும் வரை விட்டு, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகச் சுருக்கங்கள் மறையும். தயிரை முகத்தில் பூசி ஊற வைத்துக் குளித்தால் முகம் பளபளப்பாகும். ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலந்து வர முகம் பளபளப்பாகும். கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ முகச் சுருக்கங்கள் மறையும்.
பாலேட்டை நன்றாக தேய்த்து ஊற விட்டு முகம் கழுவ முகம் மென்மையுடன் பிரகாசமாகும். பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும். கேரட், ஆரஞ்சு சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி நிமிடங்கள் கழித்து கழுவ 15 வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் மூன்று துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பு பெறும். ஆரஞ்சுப் பழச் சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து பயிற்றம் பருப்பு மாவை கொண்டு தேய்த்து முகம் கழுவினால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் பளபளப்புடன் மிருதுவாகவும் இருக்கும். பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும் முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
கரும்படை இருந்தால் கசகசாவை எலுமிச்சம்பழ சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வர கரும்படை மாறி சருமம் இயற்கை நிறம் பெறும். வாழைப் பழத்தை கூழாக்கி அதனுடன் தேனைக் கலந்து பூசி வர முகம் பளபளப்பாகும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி குளித்தால் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
பாலுடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும். வெள்ளரிச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ முகம் பளீரென்று இருக்கும். தக்காளியை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து உலர வைத்து கழுவ வேண்டும். முகம் பளபளப்பாகும்.
இயற்கைப் பொருள்களைக் கொண்டு பேசியல் பண்ணுவது எப்படி?
கீழ்க் கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் போதும். நீங்கள் பேரழகி ஆகிவிடலாம். நன்றாக அரைத்த ஆப்பிள் விழுது, பால், பச்சரிசி மாவு இவற்றை சமஅளவு கலந்து முகத்தில் பூசி மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து பாலுடன் சிறிது தண்ணீரைக் கலந்து முகத்தைக் கழுவ வேண்டும்.
ரோஜா, மரிக்கொழுந்து, மல்லி, செம்பருத்தி, தாழம்பூ, ஆரஞ்சு, எலுமிச்சைத் தோல், கஸ்தூரி மஞ்சள்,. பச்சைப் பயிறு, வெட்டி வேர் இவற்றை நன்றாக உலர்த்தி பொடி செய்து பாட்டிலில் அடைத்து தேவைப் படும் பொழுது எடுத்து ரோஸ்வாட்டர் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பளிச்சிடும்.
பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், கசகசா, வெட்டி வேர் போன்றவற்றை தலா கிராம் 2 அளவு எடுத்து அவற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு, சந்தனப் பவுடர், பால் பவுடர் இவற்றுடன் எலுமிச்சைச் சாறு, பன்னீர், சிறிதளவு மஞ்சள் கலந்து நன்றாக குழைத்து பசை போல் செய்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ முகத்திலுள்ள கருப்பு புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பு பெறும். புதினா சாற்றையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் எலுமிச்சைச்சாற்றை சற்று அதிகமாக கலந்து கொள்ளலாம்.
இயற்கைப் பொருள்களைக் கொண்டு ப்ளீச் செய்வது பற்றிய குறிப்புகள்:
உருளைக் கிழங்கை நன்றாக அரைத்து பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் ப்ளீச் செய்யப் பட்டு பிரஷ்ஷாகக் காணப்படும். ஆலம் விழுதுப் பொடி மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு கலந்து நீரில் ஊற வைத்து அந்த நீரைக் கொண்டு முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் ப்ளீச்சாகும்.
வெள்ளரிச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகம் பளிச்சென மாறும். பச்சை வாழைப் பழத்தை நன்றாக மசித்து அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகவும் புத்துணர்ச்சி- யுடனும் இருக்கும்.