கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்
கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்- ணெயை ஒன்று (அ) இரண்டு சொட்டுகள் விட்டு வர வேண்டும். இரண்டு சொட்டு தூய்மையான தேங்காய் எண்ணெயை வாரம் ஒருமுறை கண்களில் விட்டு வர வேண்டும். கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.
கண் கருவளையம் நீங்க சந்தனக் கல்லில் சாதிக் காயை அரைத்து இரவில் பூசி வந்தால் கருவளையம் விரைவில் மறையும். தினமும் கண்களுக்கு பயிற்சி அளித்து வந்தாலும் கண் பார்வை நன்றாக இருக்கும். வெள்ளரிக்காயை அரைத்தோ (அ) வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றியும் பேக் போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.
கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசி வர வேண்டும். மூடிய கண் இமைகளின் மீது பன்னீரை பஞ்சில் நனைத்து தேய்த்து விட, கண் இமைகளின் நிறம் கூடும். திரிபலா சூரணத்தைச் சாப்பிட்டு வந்தாலும் கண் பார்வை நன்றாக இருக்கும். தேயிலைத் தூளை கொதிக்க வைத்து வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மேல் வைத்து வந்தாலும் கருவளையம் நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சிரகத்தில் 100 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து புகை வரும்படி காய்ச்சி அந்த எண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும், சிகப்பும் மாறும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகையளவு எடுத்து ஒரு கப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளி வீசும்.
உருளைக் கிழங்கை அரைத்து கண்களைச் சுற்றியும் கண்களின் மேலும் பேக் போட கருவளையங்கள் மறைந்து விடும். கண்களை இடது-வலதாக, மேலும்-கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 முறை செய்ய வேண்டும். பிறகு கண்களை இறுக்கமாக மூடித் முறை செய்ய திறக்க வேண்டும். இவ்வாறு முறை செய்ய 5 வேண்டும். இது கண்களுக்கான சிறந்த பயிற்சி.
வெண்ணெய்யுடன் கொத்தமல்லிச் சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும். நந்தியாவட்டை பூவை பறித்து நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டி வர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்களின் மேல் ஒற்றியெடுக்க, கண்கள் குளிர்ச்சி அடைந்து பிரகாசமாகும்.
வாரம் இருமுறை இரவில் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெயை கண்களில் விட்டு வந்தாலும் கண்கள் குளிர்ச்சியாகும். கண்களை தினமும் பன்னீரால் துடைக்க கண்கள் புதுப் பொலிவு பெறும்.