அரோமா தெரபி:
அரோமா தெரபி என்பது ஆயுர் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் சிகிச்சை முறையில் முகத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம். இந்த சிகிச்சைக்கு பலவிதமான தைலங்கள் பயன்படுத்தப் படுகிறது.
இந்த தைலங்களை மூக்கின் அருகில் வைத்து நுகரச் செய்தும், உடலில் தேய்த்து "மசாஜ்" செய்தும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த சிகிச்சை உடலுக்கு அழகைத் தருவதோடு மனதுக்கும், புத்துணர்ச்சியைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிகிச்சை மூலம் கிடைக்கும் அதிக பலன் என்னவென்றால் இதனால் கிடைக்கும் அழகு அதிக நாள்கள் நிலைத்து நிற்கும். மேலும் முகப்பரு மூலம் ஏற்படும் புள்ளிகளைப் போக்கவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்கவும் கண்ணைச் சுற்றியிருக்கும் கருவளையத்தை நீக்கவும் அரோமா தெரபி உதவுகிறது.
சருமத்திற்கு உபயோகமாகும் அரோமா எண்ணெய்கள்:
அரோமா எண்ணெயை சாதாரண எண்ணெய்யுடன் கலந்தே மசாஜ் செய்ய உபயோகப்படுத்த வேண்டும். 100 மி.லி. சாதாரண எண்ணெய்யுடன் 2 அல்லது 3 துளிகள் அரோமா எண்ணெய் கலந்து உபயோகப்படுத்த வேண்டும். கீழே சில அரோமா எண்ணெய்களும் அவற்றின் உபயோகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃப்ரான்க்கின்சென்ஸ் (Frankincense):
இந்த எண்ணெய் சருமத்திற்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு முகச் சுருக்கத்தை நீக்கி, முகத்திற்கு பள- பளப்பையும், பொலிவையும் கொடுக்கும்.
ஆப்ரிக்காட் எண்ணெய் (Apricot):
இந்த எண்ணெய் வறண்ட, வயதான, சென்சிட்டிவ் ஆகிய சருமங்களுக்கு மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.
க்ளாரிசேஜ் எண்ணெய் (Clarysage):
இது சரும் பாதுகாப்பிற்கு பயன்படும் அரோமா எண்ணெய் ஆகும். திருமணமான பெண்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டிய எண்ணெய்யாகும்.
மோக்ரா அப்சலூட் (Mograbsolute):
இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் சருமத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும். திருமண- மான பெண்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். பருவம் அடையும் வயது வந்ததும் பருவமடையாத பெண்கள் இதனை உபயோகப் படுத்தினால் நல்ல பலன் கிட்டும்.
ஈவினிங் பிரேம்ரோஸ் (Evening Primerose):
இந்த எண்ணெயை வறண்ட மற்றும் செதில் போல் உள்ள சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் சிறந்த பயன் பெறலாம். பருவமடைந்த பின்னும் நீண்ட நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் பெண்- களுக்கும் மிகவும் ஏற்றது.
கேலன்டூலா எண்ணெய் (Calendula Oil):
இந்த எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய் - வதால் நல்ல அழகைக் கொடுப்பதோடு, சருமத்திலுள்ள புண் வெடிப்பு, தீக்காயங்களையும் சரியாக்கும்.
நீம் எண்ணெய் (Neem Oil):
இந்த எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய் வதால் சருமத்தில் உள்ள கிருமிகள் அகன்று பருக்கள் மறையும்.
அஷ்வகந்தா எண்ணெய் (Ashwagandha Oil):
இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பாதுகாப்பையும் தரும்.
காஸ்டஸ் எண்ணெய் (Costus Oil):
இந்த எண்ணெய் சரும பராமரிப்பிற்கு மிகச்சிறந்த எண்ணெய்யாகும். 100 கிராம் சாதாரண எண்ணெய் உடன் ஒரு துளி காஸ்ட்ஸை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் (Olive Oil):
இது பொலிவிழந்த சருமத்திற்கு மசாஜ் செய்ய மிகவும் நல்லது.
கேரட் எண்ணெய் (Carrot Oil):
இந்த எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்தால் சருமத்திற்கு ஊட்டத்தையும் பொலிவையும் கொடுக்கும்.