அழகாக மேக்-அப்
பொதுவாக அனேக பெண்களுக்கு மேக்-அப் செய்வதற்கு மணி நேரங்கள் ஆகும். இதனால் பல பல நிகழ்ச்சிகளுக்கு தாமதமாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பெண்கள் மேக்-அப் முடித்து வருவ- தற்குள் காத்திருக்கும் ஆண்கள் நொந்து விடுவார்கள். அப்படிப் பட்ட பெண்களுக்காக ஐந்தே நிமிடத்தில் அழகாக மேப்-அப் செய்வது பற்றிய குறிப்புகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேக்கப்புக்குரிய சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருங்கள். நீங்கள் அவசரமாகப் புறப்படும் நேரத்தில் 'ஐ ப்ரோ' பென்சிலைத் தேடியும் 'லிப்ஸ்டிக்கைத்' தேடியும் ஓடிக் கொண்டிருந்தால் நேரம் தான் தாமதமாகும்.
எல்லா வகை பிரஷ்களையும் ஒரு கப்பில் போட்டு வையுங்கள். இன்னொரு பெட்டியில் *ஐ ப்ரோ' பென்சில், 'ஐ லைனர்' பிரஷ், 'கண்மை' போன்ற- வற்றையும் போட்டு வையுங்கள். லிப்ஸ்டிக், பேஸ் பவுண்டேஷன் பவுடர், பொட்டு போன்றவற்றைத் தனியாக ஒரு கவரில் போட்டு வையுங்கள்.
பெண்கள் தங்கள் கூந்தலைப் பின்னுவதற்கே அதிக நேரத்தை செலவிடுவதுண்டு. அவ்வாறு இல்லாமல் அழகுக்கு எடுப்பாகவும், விரைவாகச் செய்யக் கூடிய- துமான ஹேர்ஸ்டைலை விரைவாக உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
காரிலோ, பஸ்ஸிலோ, இருசக்கர வாகனங்களிலோ இவற்றில் எதில் பயணம் செய்தாலும் சரி கூந்தல் கட்டு அவிழ்ந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடியைப் பறக்க விடும் 'ஹேர் ஸ்டைல்' நல்லதன்று. அது அடுத்தவர்களுக்கும் தொந்தரவு தரும்.
அவசரமாகப் புறப்பட வேண்டிய தருணங்களில் புதிய ஸ்டைல் எதிலும் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கக் கூடாது. புதிய முயற்சிகளை ஓய்வு நாட்களில் செய்து பார்க்கலாம்.
முகத்துக்கு மேக் அப் போட்ட பின்பு கூந்தலை சீவிக் கட்டுவது சிறந்தது. ஏனென்றால் முக அழகுக்குப் பொருத்தமாகக் கூந்தலை சரி செய்யலாம். சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் கூந்தலைச் சீவிக் கட்டிய பின்பே மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.
சருமப் பாதுகாப்பான திரவத்தில் நாலைந்து சொட்டு-களை கையில் விட்டு முகத்தில் தேய்க்க வேண்டும். வேறு கிரீம்களைத் தேய்த்து விட்டு வெளியில் நடந்தால் முகம் கறுத்து விடும். முகத்தின் நிறத்திற்குப் பொருத்தமான பவுடரைப் பூசுங்கள்.
கெட்டியான புருவங்கள் என்றால் ஒரு முறை பிரஷ் செய்தால் போதும். மெலிதான புருவமட் என்றால் ஐ ப்ரோ பென்சிலால் மெதுவாக வரைய வேண்டும். எந்த மாதிரி உடை அணிகிறீர்களோ, அதற்கேற்ற இளம் நிறத்திலான ஐ-ஷேடோ புரட்டுங்கள்.
கண்மை போட அதிக நேரம் ஆகும். அதனால் பென்சில் பயன்படுத்துங்கள். கறுப்பு, பிரவுன், நீல நிறங்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் நிறத்துக்கும், உடை நிறத்துக்கும் பொருத்தமான பென்சில்களைப் பயன்படுத்த வேண்டும்.
உடையின் நிறம், ஐ ஷேடோ' ஆகியவற்றுக்குப் பொருத்தமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளுங்கள். பொட்டுக் குங்குமம் அல்லது சாந்து பயன்படுத்தலாம்.
புடவை, சுரிதார், மிடி-டாப்ஸ் எதை அணிய வேண்டும் என்பதை முதல் நாள் இரவிலே தேர்ந்தெடுத்து வைத்து விட வேண்டும். அந்த உடையையும் உடுத்தி விட்டால் உங்கள் வேலை முடிந்தது.
அப்படியே கண்ணாடியில் பாருங்கள். அட! ஐந்தே நிமிடத்தில் அழகாகப் புறப்பட்டு விட்டீர்களே!