வாய் நாற்றத்தை போக்குவது பற்றிய குறிப்புகள்
பற்கள் சரியாக அமையாவிட்டால் வாய் நாற்றம் வரும். பட்டினியாக இருக்கும் போதும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். உடைந்த பற்கள், ஈறு நோய், பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுத் துணுக்குகள் ஆகியவையும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகும்.
நமது உமிழ்நீரில் வாழும் கிருமிகள் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. "சைன சைட்டிஸ்", "டான்சிலைட்டிஸ்", "கியாஸ்டிக் அல்சர்" போன்ற நோய்களின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
வாய் நாற்றம் இருப்பதாக உணர்ந்தால் லேசான சுடுநீரில் சிறிதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது சிறந்தது. வாய் நாற்றம் ஏற்பட்டால் முதலில் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். மாங்காய், கரும்பு, அன்னாசிப்பழம், ஆரஞ்சுப்பழம் போன்றவை பற்களுக்கு வலுவூட்டும் உணவு வகைகளாகும். இவற்றைப் பற்களால் கடித்துச் சாப்பிடுதல் நல்லது.
வாய் நாற்றம் இல்லாமல் தடுப்பதற்கு சாப்பிட்ட பிறகு பல் துலக்காவிட்டாலும் வாயை நன்றாகக் கழுவிக் கொப்பளிப்பதையாவது அவசியம் செய்ய வேண்டும்.
உதட்டை அழகாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்
கிளிசரின் மற்றும் பன்னீர் கொண்ட கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும். பீட்ரூட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பழகு பெறும்.
உதடுகள் மென்மையாக வெண்ணெயைப் பூசி வர வேண்டும். நில ஆவாரை, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து தடவி வந்தால் உதடுகள் சிகப்பாக மாறும்.
கொத்தமல்லிச் சாற்றை இரவில் பூசி வர உதட்டின் கருப்பு நிறம் மாறும். ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசி வர உதடுகள் சிகப்பாக மாறும்.
சந்தனத்தை பன்னீரில் குழைத்தும் பூசி வரலாம். உதட்டில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறட்சியைப் போக்க பாலாடையை தினமும் தேய்த்து வர வேண்டும்.
ரோஜா இதழ்களை பால்விட்டு அரைத்து பூசி வந்தால் உதட்டு வெடிப்பு மாறும்.