கோடை காலத்தில் அழகு பராமரிப்பு
கோடை காலத்தில் வெயிலின் கடுமை காரணமாக நிறைய வியர்வை வெளியேற்றப்படும். இதனால் எளிதில் சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக சூடு காரணமாக பலருக்கு வியர்வைப் பரு எனப்படும் வேர்க்குரு ஏற்படும்.
எனவே கோடை காலத்தில் சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் பெண்கள் கட்டாயம் ஆர்வம் காட்டியாக வேண்டும். அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
சிலருக்கு அதிக வெட்கையின் காரணமாக வேனற் கட்டிகள் வருவதுண்டு. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது படும் போது அப்பகுதியில் சொறி, அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும். சருமமும் கருமை படர்ந்து காணப்படும். ஆதலால் கோடை காலத்தில் தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை குளித்தல் அவசியம்.
அடிக்கடி வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளுதல் வேண்டும். இதனால் சூரிய கதிர்களின் தாக்குதலிலிருந்து கண்ணை பாதுகாக்கலாம்.
கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்கும் குளிர் பானங்கள், இளநீர், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுதல் நலம். இதனால் உடலில் உஷ்ணத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
சிகப்பழகுப் பெற சில குறிப்புகள்:
பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் தாங்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதுண்டு. இதில் முக்கியமாக பெண் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். ஏனெனில் தற்போது நிறைய ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையை கொண்டவராக இருப்பதால் பெண்ணின் சிவப்பழகு குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. எனவே நீங்களும் சிவப்பாக அழகாக மாற
இதே சில குறிப்புகள் :-
குங்குமப் பூவுடன் அதிமதுரத்தை சிறிதளவு கலந்து 8 மணி நேரம் ஊற வைத்து பிறகு எடுத்து முகத்தில் பூசி 15 நீமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி சிகப்பழகு ஏற்படும்.
இரவில் தேவையான அளவு பாதாம் பருப்பை ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து பாலேட்டில் கலந்து முகம், கை, கழுத்து, கால்களில் தடவி ஊற வைத்து குளித்தால் தோலின் நிறம் மாறும்.
கடல்பாசி, பன்னீர், சந்தன எண்ணெய் இவற்றைச் சமஅளவில் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர கருமை நிறம் மாறி சிகப்பழகு கிடைக்கும்.
வெள்ளரிக்காய்ச் சாறு, பால் இரண்டையும் கலந்து உடல் முழுவதும் பூசி ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடல் பளபளப்படையும்.