கைகளின் அழகைப் பராமரிப்பது பற்றிய குறிப்புகள்
முகத்திற்கு அடுத்த படியாக அனைவரின் பார்வையிலும் படும் பகுதி-கைகள் எனவே கைகளின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் அனைவருக்கும் வேலை செய்ய பயன்படும் முக்கிய உறுப்பும் கைகள் தான். அத்தகைய கைகளை அழகாக- வும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெண்களுக்கு சுற்றுப்புறச் சூழ்- நிலைகளாலும், வேலைகளாலும் கையின் அழகு பாதிக்கப்படுகிறது. சூரியஒளி, பனி, சோப்பு, ரசாயனப் பொருட்கள் போன்றவை கைகளில் படும்பொழுது அவற்றின் அழகு பாதிக்கப்படுகிறது. எனவே இவற்றில் வேலை செய்ய நேர்ந்தால் கைகளில் “கிளவுஸ்" அணிவது அவசியம்.
சில பெண்களுக்கு அடிக்கடி தண்ணீரில் கைகளை வைத்திருக்க வேண்டிய வேலையின் காரணமாக கைகளிலுள்ள தோல்கள் பாதிக்கப்பட்டு அவற்றின் அழகு கெட்டு விடுகிறது. அவ்வாறானவர்களும் கைகளில் "கிளவுஸ்" அணிதல் அவசியம். மேலும் சமையல் செய்யும் போதும் பெண்கள் கைகளின் அழகு பாதிக்கப் படாதவாறு கவனமாக செய்ய வேண்டும்.
பெண்களில் பலர் கைமூட்டுகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை. கைகளின் மூட்டு மற்றும் நகங்களின் கீழ் பகுதி கருமை ஏறியிருந்தால், அப்பகுதி- களில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி தேய்த்தால் விரைவில் கருமை மாறி நிறம் கூடும். தோலும் வசீகரம் ஆகும்.
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் வைட்டமின் “ஈ” காப்ஸ்யூல் ஒன்றைக் கொட்டிக் கலக்கி, அதில் நகங்களைச் சிறிது நேரம் முக்கி வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து விரல்களைப் பெரு விரலால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு இரண்டு கைகளிலும் காட்டன் கிளவுஸ் அணிந்து கொண்டு தூங்க வேண்டும். இவ்வாறு செய்தால் கைகளுக்கு நிரந்தரமான கவர்ச்சி கிடைக்கும்.
அழகு நிலையங்களில் கைகளை அழகுபடுத்த செய்யப் படும் சில குறிப்புகள் கைகளை சுத்தம் செய்ய, சுத்தப்படுத்த பயன்படும் பிரத்யேகமான திரவத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அவரவரின் சருமத்திற்கு தகுந்த கிரிம்களை கைகளில் முழுவதுமாக தடவ வேண்டும்.
சில வகை கீரிம்கள், மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் "வாக்ஸ் பேக்' எனும் ஒருவகை அழகுப் பொருளை கைகளில் தேய்த்துப் புரட்ட வேண்டும். வாக்ஸ் பேக்கை, பிரஷ்ஷை கொண்டு கைகள் முழுமையாக மூடும் படி தடவி கைகளில் இருக்கும் இயல்பான சூட்டைப் பாதுகாத்து, சருமத்துக்கு மேல் பூசப்படும் கிரீம் உள்பகுதி வரை செல்ல வசதியாக இரண்டு கைகளையும் பொதிந்து மூட வேண்டும்.
இருபது நிமிடம் ஆனதும் கைகளின் மேல் செய்யப் படும் பேக்கிங் "பிளாஸ்டர்” போல காய்ந்து பிடித்துக் கொள்ளும். பின்பு அதனை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். தற்போது கைகளின் கரடு முரடான மேல் தோல் உருமாறி மிருதுவாக கவர்ச்சியாக இருக்கும்.