துளசி மருத்துவ பயன்கள் (Holy Basil, Ocimum tenuiflorum)
துளசியின் தீர்த்தம் கங்கை நீருக்கு நிகரானது. துளசி மணியைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. அதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசி மணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளைக் கண்டிக்கிறது.
துளசி வேரை கையில் அணிவதால் இடிவிழும் பயம் இல்லை. வீடுகட்டும் போது வீட்டின் வாயிற்படியில் மஞ்சளில் நனைத்த துணியில் துளசியைக் கட்டிவைத்தால் இடிவிழாது. இடிதாங்கியை விட அதிக சக்தியுள்ளது இது.
துளசிச் செடி பூவிட்டு வளருகையில் கவனமாக இருந்து பூவும் விதையும் முற்றிப் போவதற்கு முன் கொத்துக் கொத்தாக உள்ள பூவைக் கொய்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு துளசிச் செடி பட்டுப் போகாமல் பலன்தரும்.
பண்டைய காலத்தில் யுத்தத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் வெற்றி கிடைப்பதற்காகத் துளசி மாலையை அணிந்து சென்றனர். வீர சாகசம் புரியும் வீரர்களுக்கு துளசி மாலையைப் பரிசாக அளிக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இருக்கிறது.
இறந்தோர் உடலை துளசியின் மீது படுக்க வைத்து துளசியில் மூடி வைத்தால் ஒருவார காலம் வரை கெடாமலும் துர்நாற்றம் வீசாமலும் உடலைப் பாதுகாக்கும். துளசி மனித குலத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான மூலிகை எனலாம்.
துளசியின் வேறு பெயர்கள் துளசிக்கு வடமொழியில் பலபெயர்கள் உள்ளன, அப்பெயர்கள் அதன் தன்மைகளை விளக்குவனவாக உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். துளசியில் நல்ல சாறு உள்ளது. ஆகையால் "சரஸா" எனவும், பல இலைகளைக் கொண்டதால் "பகுபத்திரி" எனவும்.
பல மலர்க் கொத்துக்களைக் கொண்டதால் "பஞ்ச எனவும், எளிதில் கிடைப்பதால் "சுலபா" எனவும், விஷ்ணுக்கு மிகவும் பிரியமானதால் "விஷ்ணு வல்லபா" எனவும், கிராமப் பகுதிகளில் கிடைப்பதால், "கிராம்யா" எனவும், புனிதத் தன்மையை உடையதால் "பாவனி" எனவும், வேறு பெயர்களைக் கொண்டுள்ளது.
தமிழில் துளசிக்கு திருத்துழாய், குல்லை, துளவு, கிருஷ்ண துளசி, இராம துளசி, வனம், விருந்து போன்ற பெயர்களும் உண்டு.
1. துளசியின் சிறப்பு மருத்துவப் பயன்கள்
மூளை சோர்வு, மூளை பலம் :-
மண்டை ஓட்டினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உறுப்பு மனித மூளையாகும். இம்மூளை சோர்வடையும் போது அதற்கு புத்துணர்ச்சி தரும் மூலிகைகளில் துளசிக்குத்தான் முதலிடம். 10 துளசி இலைகளை எடுத்து ஒரு குவளை நீரில் போட்டுக் காய்ச்சி ஏலக்காய் 2, தேன் 2 டீஸ்பூன், சிறிது பசும்பால் கலந்து பருகினால் களைப்படைந்த மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். சிறிது துளசி இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நமது மூளை பலம் பெறும்.
காக்கை வலிப்புக்கு (Epilepsy) :-
மூளைக்குச் சரியாக இரத்த ஓட்டம் கிடைக்காததால் மூளையின் அணுக்கள் மூளையின் அணுக்கள் (Cells) செயலிழக்கும். அப்போது கால் கைகள் வெட்டி வெட்டி இழுக்கும். அதற்கு கிராமப்புறத்தில் சாவிக்கொத்தையோ அல்லது இரும்பையோ கொடுத்தால் நோயாளிக்கு வலிப்பு நின்றுவிடும் என நம்புகின்றனர். இதற்கு விஞ்ஞானப் பூர்வமாக ஆதாரம் இல்லை. இத்தகைய வலிப்புக்குத் துளசி ஒரு அற்புதமான நிவாரணியாகச் செயல்படுகிறது.
துளசி இலையைத் தட்டிச்சாறு எடுத்து 30 மில்லி சாற்றில் அரை தேக்கரண்டி உப்பைப் போட்டுக் கலந்து காலையில் மட்டும் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குணமாகிவிடும் என்றும், மருந்து சாப்பிடும் காலத்தில் வலிப்பு வந்தால் பூண்டைத் தட்டிச்சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் உடனே வலிப்பு நிற்கும் என்பதும் சித்த மருத்துவர்களின் அனுபவ சிகிச்சை முறை என்று பழம் ஓலைச் சுவழியில் சொல்லப்பட்டுள்ளது.
தலைப்பேனுக்கு :-
சிறு குழந்தைகளும், பள்ளிப் பிள்ளைகளும் பேன் தொல்லையால் அவதிப்படுவார்கள். அதற்கு தலையணையின் மீது கருந்துளசியைப் பரப்பி அதன் மீது லேசான துணியை விரித்து தலைவைத்து படுக்கும்படி செய்தால் துளசியின் வாடை பிடிக்காமல் பேன்கள் அனைத்தும் இறங்கி ஓடிவிடும்.
காதுவலி குணமாக :-
மணத்தக்காளி இலைகளை - யும் சேர்த்துத் தட்டி கசக்கி, வலிக்கும் காதில் இரண்டொரு சொட்டுகள் விட காதுவலி குணமாகும்.
தொண்டைத் தொல்லைக்கு :-
தண்ணீரில் பரவும் வைரஸ்களால் தொண்டை பாதிப்படைந்து, தொண்டை அழற்சி ஏற்பட்டு புண்ணும் அதைத் தொடர்ந்து, வலியும் உண்டாகும். அதற்கு துளசியை குடிநீரிலிட்டு தொண்டை யில் படும்படி வாய் கொப்பளித்தாலும் அல்லது அக்குடிநீரைக் குடித்தாலும் தொண்டைத் தொல்லைகள் நிவர்த்தியாகும். "டான்சில்" என்று சொல்லப்படும் தொண்டை கழலையும் கரையும்.
நுரையீரல் :-
சுவாச மண்டலத்தின் முக்கியமான உறுப்பு நுரையீரல், இது பாதிக்கப்படும் போது சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, தும்மல், நுரையீரல் அழற்சி போன்ற நோய்கள் உண்டாகின்றன.
துளசி நெருப்பு அம்சம் பொருந்தியது ஆகும். எனவே. இது கபசம்பந்தப்பட்ட இருமல், இளைப்பு, தீராத காசநோய் போன்றவைகளை தீர்க்கவல்லது. அதோடு காய்ச்சலும் குணமாகும் என்பதை கீழ்க்கண்ட வரிகள் மெய்ப்பிக்கிறது.
புகைபிடிப்பதால் வரும் கேட்டிற்கு :-
துளசி இலை, தூதுவளை, கண்டங்கத்திரி இம்மூன்று இலைகளையும் ஒவ்வொரு கைப்பிடியளவு எடுத்து லேசாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றிலும் 10 கிராம் எடுத்து இடித்து கலந்து காய்ச்ச வேண்டும். அக்குடிநீர் 1/4 லிட்டராக வற்றியதும் வடித்து சிறிது தேன் கலந்து வைத்துக்கொண்டு காலை, மாலை 18 நாள் சாப்பிட குணமாகும்.
நெஞ்சுவலி குணமாக :-
அரைக்கைப் பிடியளவு துளசி இலையைக் கொண்டு வந்து மண்சட்டியில் போட்டு அதனுடன் 1/2 கைப்பிடி கற்கண்டை பொடித்துப் போட்டு 2 ஸ்பூன் தேன்விட்டு அடுப்பில் வைத்து அதனுடன் 400 மில்லி தண்ணீர் விட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி, வேளைக்கு 4 தேக்கரண்டி வீதம் 4 வேளை பருகி வர எத்தகைய கொடுமையான நெஞ்சு வலியும் குணமாகும்.
வாந்தி நிற்க :-
1 டம்ளர் வெந்நீரில் 1 தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தேவையான அளவு கற்கண்டு சேர்த்து கொண்டு அடிக்கடி சிறிதளவு சுவைத்து உமிழ் நீர் கலக்கும்படி செய்து சாப்பிட்டு வர வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.
வயிற்று இரைச்சலுக்கு :-
பல்வேறு வயிற்றுத் தொல்லையால் வயிற்றில் இரைச்சல் ஏற்படுவதுண்டு. அத்தகைய நேரத்தில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு துளசி விதைகளைப் போட்டு ஊற வைத்து அந்நீரைக் குடித்து விதைகளையும் மென்று சாப்பிட வயிற்றிரைச்சல் குணமாகும்.
பாம்பு கடிக்கு :-
பாம்பு கடித்தவுடன் கருந்துளசி இலைகளை இடித்து 100 மில்லி சாரெடுத்து உடன் குடிக்கக் கொடுக்க வேண்டும். பின்பு அதே கருந்துளசிச் சாற்றை உடல் முழுவதும் தடவிவிட விஷம் இறங்கும்.
இல்லற இன்பம் பெறுக :- துளசி வேரை உலர்த்தி பொடியாக்கி அதில் சிட்டிகையளவு 2 எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டுவர வீரிய விருத்தி உண்டாக்கி இல்லற உறவில் இன்பம் உண்டாகும்.
மலடு நீங்க :-
கொஞ்சி விளையாட மழலை இல்லையே என்று நீண்ட நாளாக ஏங்குபவர் பலர். அவர்கள் துளசிவிதை, கடுக்காய், ஜாதிக்காய், சுக்கு இவை நான்கையும் சம அளவாகப் பொடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு இரவில் சாப்பிட்ட பிறகு படுக்கும் முன்பு ஒரு சிட்டிகை வீதம் வாயில் போட்டு ஆழாக்கு பசும்பால் கற்கண்டு சேர்த்து குடித்துவரவும். இவ்விதம் 40 நாள் குடித்து வந்தால் ஆண்கள் மலடு நீங்கும்.
இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் கைபிடியளவு துளசி இலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு அதில் ஒரு செம்புக் கரண்டியையும் போட்டு வைக்க வேண்டும். அதிகாலையில் பல் துலக்கி இதளை வடிகட்டி அருந்திவர 4448 வியாதிகளும் குணமாகும்.
2. துளசித் தயாரிப்புகள்
துளசியைக் கொண்டு பல்வேறு மருந்து தயாரிப்புகளைச் செய்யலாம். துளசியை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இம்மருந்துகள் இல்லந்தோறும் இருக்க வேண்டிய இனிய மருந்துகளாகும்.
துளசிக்கஷாயம் ஒரு கைப்பிடியளவு துளசியில் 1/4 லிட்டர் நீர்விட்டுக் காய்ச்சி 50 மில்லியாக வற்றவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளலாம்.
சளி, இருமல் போன்றவற்றிற்கு இக்கஷாயத்துடன் திப்பிலி சூரணம் ஓரிரு சிட்டிகை கலந்து சேர்த்து அருந்தலாம். பசியின்மைக்கு இக்கஷாயத்துடன் சிறிது ஓமம் சேர்த்து பருகலாம். வாந்தி, மலச்சிக்கல் போன்றவை களுக்கும் துளசி கஷாயத்துடன் 2 வெற்றிலையை வாட்டி கசக்கிப் பிழிந்து சாறெடுத்து கலந்து கொடுக்கலாம்.
துளசி டீ (Tulsi Tea) :-
துளசி இலைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு பரங்கிப்பட்டை, சுக்கு, சித்தரத்தை, ஏலரிசி போன்றவைகளை சமயோசிதம் போல் தேவையான அளவு எடுத்து பொடியாக்கி துளசிப் பொடியுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1 டம்ளர் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் என்ற அளவு போட்டு செய்து பால், சர்க்கரை கலந்து அருந்தி வரலாம். இதனால் இரத்தம் சுத்தமாகும். கபநோய்கள் காததூரம் ஓடும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். நுரையீரல் பலமடையும்.
3. துளசியின் வகைகள்
வெண்துளசி :-
வெண்துளசி காரத்தையும் வாசனை - யையும் உடைய சிறுசெடி, இதனுடைய சாறு அஸ்திகீரம், மாந்தம், இருமல், கபம் முதலான குழந்தை நோய்களைப் போக்கும்,
இதன் சாற்றைப் பருக இதயத்திற்கும், ஈரலுக்கும் பலத்தை உண்டாக்கும். பசியையும் உடல் பலத்தையும் தரும்.
கருந்துளசி :-
கருந்துளசி வெண்துளசியை விட நிறத்தில் வேறுபட்டது, வெண்துளசியில் இலைகளும் தண்டுகளும் வெண்மை கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.
கருந்துளசியோ பசுமை கலந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். சில மண்வாகு உள்ள இடத்தில் நீலநிறமாகக்கூட காட்சித் தரும்.
ஆனால், இதற்கு சாதாரண வெண்துளசியை விட வீரியம் அதிகம். தேள் கொட்டினால் 10 துளசி இலைகளை மென்று தின்று முற்றிய சிறு தேங்காய் சாப்பிட விஷம் இறங்கும்.
பெண்களுக்கு வயிற்றில் குழந்தை கருவிலே இறந்துவிட்டால் 200 மில்லி கருந்துளசிச் சாற்றுடன் 20 மில்லி நல்லெண்ணெய் கலந்து கொடுக்க இறந்த பிண்டம் வெளியேறும். இதன் விதையை அனைத்து பாலில் கலந்து பெண்கள் அருந்தினால் வெள்ளை விழுவது நிற்கும்.
நாய்த்துளசி :-
நாய்த்துளசியை கங்காதுளசி, கஞ்சாங்கோரை என அழைப்பர். வயல்வெளிகளில் தன் இச்சையாக வளர்ந்து காணப்படும். இது நல்ல வாசனை நெடி உடையது. ஆசன வாயில் புழுக்களால் உண்டாக்கப்படும் அரிப்புக்கு இதன் இலையை வதக்கிக்கட்ட புழுக்கள் அழியும்.
உடலில் ஏற்படும் சீலைப் பேனுக்கு நாய்த்துளசியையும் சேர்த்து அரைத்து பூசி குளிக்க பேன் ஒழியும். குழந்தை களுக்கு பாலுடன் தன் இலைச்சாற்றை புகட்ட விக்கல், கழிச்சல்,கபம் நீங்கும்.