ஜானு சிரசாசனம் Janu Sirsasana (Head-to-Knee Pose)
ஜானு என்றால் முழங்கால், சிரசு என்றால் தலை என்று பொருள் இந்த ஆசனத்தில் தலை முழங்காலைத் தொடும் ஆகவே இப்பெயர் பெற்றது.
ஜானு சிரசாசனம் செய்யும் முறை :
முதலில் கால்களை நேராக நீட்டி விரிப்பின் மீது அமரவும். இடது முழங்காலை மடித்து இடதுபுறம் நகர்த்தி வைக்கவும். இடது தொடை மற்றும் கால் இவற்றின் வெளிப்புறம் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
இடது குதிகால் இடது தொடைக்கு உட்புறம் ஆசன வாய்க்கு அருகில் இருக்கமாறு வைக்கவும். வலது கால் முழுமையாக நீட்டியபடி நேராக இருக்க வேண்டும்.
வலது கால் பெரு விரலை இரண்டு கைகளின் ஆள்காட்டி.நடுவிரலால்பிடித்துக் கொண்டு வயிற்றுப் பகுதியை உள்ளிழுக்க வேண்டும். மெல்ல முன்னே குனிந்து நெற்றி வலது முழங்காலை தொட வேண்டும். கை முட்டிகள் விரிப்பை தொட வேண்டும்.
ஆசன நிலையில் இருக்கும் போது இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும். செய்து முடித்தபின் இரண்டு மூன்று முறைஆழ்சுவாசம் செய்ய வேண்டும்.
ஆசன நிலையில் இருக்கும் போது இயல்பான் சுவாசத்தில் இருக்க வேண்டும். செய்து முடித்தபின் இரண்டு மூன்று முறை ஆழ்சுவாசம் செய்ய வேண்டும்.
நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும். இதே போல் இரண்டு மூன்று முறை செய்யலாம்.
பலன்கள் :
பெண்கள் இப்பயிற்சியை மேற்கொண்டால் கருப்பை தசைகளை வலுப்படுத்தவும். கருமுட்டை உருவாகிற ஓவரிகளை வலப்படுத்தவும் இது உதவுகிறது.
சிறுநீரகங்கள் நன்கு வலுப்படுத்தப்படுகின்றன. குடல் முறுக்கத்திற்கு மிகப் பயனுள்ள ஆசனம் ஆகும். சோம்பேறித்தனமும். தளர்வும் போக்கி விடும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
இந்த ஆசனம் செய்யப்படும் பொழுது வயிற்றைமுடித்த மட்டில் உள்ளே இழுத்து வைத்துக் கொண்டால் தான் அதிகப்படியான பலன் கிடைக்கும். இந்த ஆசனத்தை செய்து முடிக்க தாராளமாக கால அளவு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆசனத்தை அரை மணி முதல். ஒரு மணி நேரமாவது முறையாக தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.