மகா முத்ரா (Mahamudra)
மகா என்றால் பெரிய என்று பொருள், முத்ரா என்றால் மூடுதல் பொருள்.
மகா முத்ரா செய்யும் முறை :
வஜ்ராசனத்தில் அமரவும். முதுகை நேராக நிமிர்த்தவும் இரண்டு கால்களையும் தட்டையாக வைத்திருக்கவும். இடது கையால் வலது கையை பின்புறமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
மெல்ல முன்புறம் குனிந்து நெற்றியை முன்னால் தரையில் படும்படி வைக்க வேண்டும், மார்பு. வயிற்றுப்பகுதி தொடைகள்மேல் இருக்க வேண்டும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம்.
நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகளங செய்யவும், இரண்டு மூன்று முறை செய்யலாம்.
பலன்கள் :
வயிற்று உறுப்புகள், சிறுநிரகங்கள், அட்ரினல் சுரப்பிகள் வலுவடைகின்றன. முட்டி வலிகள், தட்டையான பாதங்கள் சரி செய்யப்படுகின்றன.