பாத ஹஸ்தாசனம் (Padahastasana)
பாதம் என்றால் காலைக் குறிக்கும், ஹஸ்தம் என்றால் கையைக் குறிக்கும், கையும் காலும்சேர்ந்து இந்த ஆசன பயிற்சியை செய்வதால் பாத ஹஸ்தாசனம் என்று பெயர்.
பாத ஹஸ்தாசனம் செய்யும் முறை :
முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும், நிற்கும்போது குதி கால்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு நிற்க வேண்டும். பின்பு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் காதுகளை ஒட்டிய படி நீட்ட வேண்டும்.
அப்போது மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து கொண்டு இழுத்த மூச்சை மெல்ல விட்டுக் கொண்டே முன்பக்கமாகக் குனிந்து கொண்டே விரல்களால் கால்களின் பெரு கை விரல்களை பிடிக்க வேண்டும்.
குனிந்து பிடிக்கும்போது இடுப்பு மட்டுமே வளைய வேண்டும். முழங்கால்கள் மடியக் கூடாது. அப்போது முழங்கால்களை நன்றாக விரைப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மூச்சை மெல்ல விட்டுக் கொண்டே வரும்போத தலையை மேலும் தாழ்த்திக் கொடுத்து முழங்கைகளைப் பக்கவாட்டில் தளர்த்தி தலையை முழங்கால்களுக்கு இடையில் புதைத்துக் கொள்ள வேண்டும், அச்சமயம் கைப்பிடியை தளர்த்தக் கூடாது.
பின்பு தலையை முழங்காலிருந்து எடுத்து மேலே உயர்த்த வேண்டும். கைகளை காதுகளுக்கு ஒட்டினாற் போலவே வைத்துக் கொண்டு மூச்சை உள்ளுக்கு இழுத்த படியே பழைய நிலைக்க எழுந்து விட வேண்டும்.
நேர அளவு :
பத்து முதல் பதினைந்து விநாடிகள் செய்யவும், இதை இரண்டு மூன்று முறைசெய்யலாம்.
பலன்கள் :
இந்த ஆசனம் செய்வதால் முதலில் இடுப்பு வலி.வயிற்று வலி. தலைவலி, மூலக்கடுப்பு நரம்பு பலவீனம், மலேரியா, சுரம். மலேரியாக்கட்டி இரத்த சோகை, வராமல் தடுக்கப்படுகின்றது, பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான சில நோய்கள் நீங்கும்.