பத்மாசனம் (Padmasana - Lotus position)
பத்மாசனம் (Lotus position) என்றால் தாமரை என்று பொருள் இந்த ஆசனம் செய்யப்படும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும் ஆகவே இந்தப் பெயர்.
பத்மாசனம் செய்யும் முறை :
சமமான தரையில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்தவும் முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்கவும் பிறகு அதே போன்று இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைக்கவும், குதிகால்கள் இருபுறமும் அடிவயிற்றைநன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைய வேண்டும். இடது கை இடது முட்டியில் வைக்கவும், வலது கை வலது முட்டியில் வைக்கவும்.
உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவும் ஆள்காட்டி விரல் விரலை தொட்டுக கொண்டிருக்கவும். (சின்முத்ரா) கட்டை முதுகை சற்றும் கோணல் இல்லாத நிலையில் நன்றாக நிமிர்த்தி வைக்கவும் கண்களை மூடி மனதை அமைதியாக வைக்கவும், ஆசன நிலையில் இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும்.
நேர அளவு :
முதலில் 1-5 நிமிடங்கள் வரை செய்யலாம், பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
பலன்கள் :
பிராணாயமம், ஜபம். தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு மிகுந்த இரத்த ஓட்டம் அளித்து தண்டுவிட அடி எலும்பு மற்றும் முதுகு தண்டு விட எலும்புகளை வலுப்படுத்துகிறது. வயிற்றின் இரத்த ஒட்டமும் சரிப்படுத்தப்படுகிறது.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
தரையில் அமர்ந்து பழக்கமற்றநபர்களின் முழங்கால்கள் அசையும் சக்தியுடன் இருப்பதில்லை, அவர்களுக்கு ஆரம்பத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். விடாத பயிற்சி மூலம் இந்த வலி மெதுவாகக் குறைந்து பின் ஆசனத்தில் நீண்ட நேரம் இருக்க முடியும்.