பவன முக்தாசனம் (Pavana Muktasana)
பயிற்சிகளில் சிறந்தது பவன முக்தாசனம், இதுவும் நமது முதுகெலும்புக்கு உன்னத சக்தியைக் கொடுக்கிறது. இந்த ஆசனத்தில் சொல்லியது போல அமர்ந்து ஐந்து ஆறு முறை ஆடும் நாற்காலி போல் முன்னும் பின்னுமாக உடலை ஆட்டினால் உடலில் ஏற்படும் சோர்வு நீங்கும். பிடிப்புகள் அகலும். இதனால் எல்லாப் பயிற்சிகளையும் மிக சுலபமாக செய்யலாம்.
பவன முக்தாசனம் செய்யும் முறை :
முதலில் சாதாரணமாக மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை நேராக நீட்டிக் கொள்ளவும். படத்தில் காட்டியது போல ஒரு காலை வயிற்றுப் பக்கமாக இழுத்து முழங்காலை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளைக் கோர்த்து மடித்த முழங்கால்களைச் சேர்த்துப் பிடித்து வயிற்றின் மேல் வைத்து அமுக்கவும். பின்பு கைகளை எடுத்து. காலைத் தளர்த்தி, முன்பு உள்ள நிலைக்கு வரவும்.
பின்பு மற்றொரு காலையும் இதே போல் மாற்றி மாற்றிச் செய்யவும். அதற்கு பிறகு இரண்டு கால்களையும் சேர்த்து மடித்து கைகளைக் கோர்த்து கால்களைப் பிடித்து வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு முகத்தினால் முழங்கால்களைத் தொடும்படி செய்ய வேண்டும்.
நேர அளவு :
ஐந்து முதல் ஆறு வினாடி வரை நிறுத்தவும் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள் :
இதைச் செய்வதனால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சிறந்த பயிற்சி கிடைக்கும்.