ஷண்முக (அ) சண்முக முத்ரா (Shanmuga Mudra)
பல வித பத்மாசனங்களின் வகையை செய்தபின் ஷண்முக முத்ரா செய்தல் வேண்டும். இதனை யோனி முத்ரா சாம்பவிமுத்ரா என்றும் சொல்வது உண்டு. மேலும் இதனை சித்தாசனா. வஜ்ராசனா ஆகியவற்றில் செய்யலாம், ஆனால் பத்மாசனத்தில் செய்வது மிகவும் நல்லது.
ஷண்முக (அ) சண்முக முத்ரா செய்யும் முறை :
சித்தாசனா அல்லது வஜ்ராசனா அல்லது பத்மாசனா ஏதேனும் ஒரு ஆசனத்தில் அமருதல் வேண்டும். மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
நேர அளவு:
பத்து முதல் இருபது நிமிடம் வரை இருக்க வேண்டும்.
பலன்கள்:
மனம் தியான நிலைக்கு செல்கிறது. பார்த்தல். கேட்டல். நகர்தல். சுவைத்தல் ஆகியவற்றைதூண்டுகிறது. மன இறுக்கத்தால் வரும் தலைவலி போக்குகிறது, நாள் முழுவதும் கடுமையான செயல்கள் செய்வதால் வரும் டென்ஷன் குறையும்.