உட்கட்டாசனம் (Utkatasana) செய்யும் முறை :
முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையே ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைத்துக் கொள்ளவும். கைகளை நேராக தோள்பட்டை அளவுக்கு முன்னே நீட்டவும்.
உடம்பை மெதுவாக கீழே கொண்டு வந்து நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும். தொடையின் மேல் பகுதி கிடை மட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலை முதுகு நேராக இருக்குமாறு நிற்க வேண்டும். முன் பக்கம் உடம்பை வளைக்கக் கூடாது.
ஆசன நிலையில் இருக்கும் போது இயல்பான மூச்சில் இருந்தால் போதும் செய்து முடித்த பின்பு நன்றாக ஆழ்ந்த மூச்சு இழுத்து விட வேண்டும்.
நேர அளவு :
இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை செய்யலாம். ஆரம்ப நாளில் ஐந்து முதல் பத்து நிமிடம் மட்டும் செய்தால் போதுமானது.
பலன்கள் :
கணுக்கால் மூட்டு. கால் சதைகள் பலம் பெறும். கால் முட்டி பலம் பெறும். தோள் பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும், கால் முட்டி வீக்கம் நீங்கும்.