உத்தானபாத ஆசனம் (Uttanpadasana)
உத்தான என்றால் உயர்ந்த, பாதா என்றால் பாதம் என்று பொருள்.
உத்தானபாத ஆசனம் செய்யும் முறை :
விரிப்பின் மீது சாதாரண்மாக மல்லாந்து படுத்துக்கொண்டு உடலுடன் சேர்ந்தாற்போல் கைகளை நீட்டி விரிப்பின் மேல் வைத்துக் கொள்ளவும்.
இரு கால்களும் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டு பாதங்களும் முன் நோக்கி இருக்க வேண்டும். மெல்ல கால்களை உயர்த்தவும். கால் முட்டியை மடக்காமல் உயர்த்தவும். அரை அடி உயர்த்தனால் போதும்.
நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகள். நிறுத்தவும். இதை இரண்டு மூன்று முறைசெய்யலாம்.
பலன்கள் :
கீழ் வயிற்றுத் தசைகள் வலிமை அடையும். தொப்பை குறையும். மலச்சிக்கல் நீங்கும். ஹெர்னியா நீங்கும். வாயுத்தொல்லை நீங்கும். பெண்கள் பிரசவத்திற்குப் பின்னால் இந்த ஆசனத்தைசெய்து வந்தால் வயிறு பெரிதாவதை தடுக்கலாம்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
கால்களை உயரத் தூக்கும் போது மூச்சை வெளி விட்டு கிழே இறக்கும்போது உள்ளிழுக்க வேண்டும். நிறுத்தும் காலத்தில் சாதாரணமாக மூச்சு விடலாம்.