நாவாசனம் (Navasana)
நாவா என்றால் படகு என்று பொருள் இந்த ஆசனம் படகு போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது.
நாவாசனம் செய்யும் முறை :
ஆசனம் செய்வதற்காக போடப்பட்டிருக்கும் விரிப்பின் மீது கால்களை நீட்டி படுக்கவும். கைகள் உடல் பக்கமாக இருக்குமாறு வைக்க வேண்டும்.
பக்கமாக உடலின் மேற்பாகத்தையும், கால்களையும் ஒரே நேரத்தில் உயர்த்தவும். கால் முட்டிகள் விரைப்பாகவும், விரல்கள் முன் நோக்கியும் இருக்க வேண்டும்.
உடலின் எடையை பிருஷ்டத்திற்கு கொடுக்க வேண்டும். முதுகுத் தண்டின் எந்த பகுதியும் கீழே படக் கூடாது. இரண்டு கைகளையும். இரண்டு கால் முட்டிகளுக்கு பக்கமாக சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கண்களும், கால் விரல்களும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். செய்யும் போது மூச்சு பிடிக்கக் கூடாது. இறுதி நிலையில் ஆடாமல் இருக்கவும்.
நேர அளவு :
பத்து முதல் இருபது நிமிடங்கள் நிறுத்தவும். இரண்டு மூன்று முறைசெய்யலாம்.
பலன்கள் :
கல்லீரல், பித்தப்பை, குடல், மண்ணீரல் வலிமை பெறுகிறது. முதுகின் கீழ்ப்புறப் பகுதியை வலிமையாக்குகிறது. பெண்கள் இந்த ஆசனம் செய்தால் முதுகின் கீழ்ப்புறப் பகுதியை வலிமையாக்குகிறது. இதன் மூலம் பெண்களுக்கு பிரசவத்தின் போது உதவுகிறது.