யோகாசனங்கள் ஓர் அறிமுகம் (Asana)
யோகா என்ற சொல் "யுஜ்" என்றவடமொழிச் சொல் அதன் பொருள் இணைதல், சேர்தல், ஒரு முகப்படுத்துதல் என்பதாகும். அப்படி ஒன்று சேர்க்கப்படுகிற ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி யோகா கற்றுக் கொடுக்கிறது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும். அத்தகைய உடல் உறுப்புகளைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க ஆசனப்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதே போல மனத்தூய்மையையும் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம்.
யோகாசனப் பயிற்சியின் விதிமுறைகள்
அதிகாலை 5 மணிக்குள் விழித்து கொஞ்ச தூரம் சென்று உலாவுதல். மல ஜலம் கழித்தல், பல் துலக்குதல் ஆகிய கடமைகளை முடித்த பின்பே பயிற்சியை தொடங்க வேண்டும்.
ஆசனங்களை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அல்லது எட்டு மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் மாலை ஜந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்,
வீட்டிற்குள்ளாதனாலும் வெளியிடமானாலும் சுத்தமான காற்றோட்டமுள்ளதாக இருக்கவும். வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு விரிப்பின் மீது அமர்ந்து ஆசனம் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
வெறும் வயிற்றோடுதான் ஆசனங்களை செய்ய வேண்டும். பெரும்பாலானவர்களுக்குக் காலையில் செய்வது தான் வசதியாக இருக்கும். மாலையில் செய்பவர்கள் ஆகாரத்துக்குப் பின் ஆறு மணி நேரம் கழித்துப் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். உடற்பயிற்சியை விரும்புவர்கள் யோகாசனம் ஒரு. நாளும் உடற்பயிற்சியை ஒரு நாளும் மாறி மாறிச் செய்ய வேண்டும்.
வியாதி உள்ளவர்கள் தேகநிலைக்குத் தகுந்த பயிற்சிகளை ஆசன நிபுணர்களை அருகில் வைத்துக் கொண்டு அவரின் ஆலோசனைப்படிதான் அருகில் வைத்துக் கொண்டு அவரின் ஆலோசனைப்படி தான் செய்ய வேண்டும்.
யோகாசனப் பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி ஆசனத்தை செய்ய வேண்டும். பயிற்சி நேரத்தில் பேச கூடாது, பயிற்சிகள் செய்யும் காலத்தில் குளியும் போதும். உட்காரும் போதும். படுக்கம் போதும். உடலின் பாகங்கள் நகங்கும் போதும் மூச்சை வெளியே விடவும், தளர விடும். போது மூச்சை உள்ளிழுக்கவும் ஆசனம் நிறுத்தும் காலங்களில் சாதாரணமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆசனப் பயிற்சிகள் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஜந்து நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி செய்ய வேண்டும், அதே போல ஆசனப் பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.
பயிற்சியாளரின் கவனத்திற்கு
ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும், அல்லது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். அவ்வாறு இரவில் தூங்க முடியவில்லையென்றால் அதனை ஈடு செய்யும் வகையில் பகலில் தூங்கும் நேரத்தை சரி செய்ய வேண்டும், தூக்க நேரம் குறைவு படும் போது உடல் நலப் பாதிப்பும் ஏற்படச் செய்யும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது, அதே போல் வெகு நேரம் குளியல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதை விடுத்து குளியல் என்று அரை மணி நேரமாகக் தண்ணீரில் கிடப்பதும் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும், ஆசனம் செய்பவர்கள் காபி. டீ. கோகோ. குடி. பொடி. புலால் உட்கொள்ளக்கூடாது.
பசியெடுக்காது உண்ணல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். பிறமாதரை விரும்புதல் மாதம் இரு முறைக்கு மேல் மனைவியோடு கூடுதல் கூடாது. ஆசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. ஆண்கள் ஜட்டி. மற்றும் பனியன் அணியலாம். பெண்கள் பைஜமா. சுடிதார் அல்லது நீச்சல் உடையிலும் செய்யலாம். ஆசனம் செய்யும் போது ஆரம்பத்தில் கண்களை திறந்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் எங்கே தவறாக செய்கிறோம் என்பதை அறிந்து சரிசெய்து கொள்ளலாம். நன்கு செய்ய ஆரம்பித்த பிறகு கண்களை மூடிக் கொள்ளவும்.
பெண்கள் மாதவிலக்கான காலங்களில் ஆசனம் செய்வதை தவிர்க்கவும். அதே போல் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதம் வரை எல்லா ஆசனங்களும் செய்யலாம். பிரசவத்திற்குப் பின்பு எந்த ஆசனமும் முதல் ஒரு மாதத்திற்கு செய்யக் கூடாது. மூன்று மாதம் கழித்து எல்லா ஆசனமும் செய்யத் தொடங்கலாம்.
யோகாசனம் மூலம் ஏற்படும் நன்மைகள்
1. உடல் வளையும் தன்மையுடையதாகச் செய்து நரம்புகளை வலுப்படுத்துகிறது.
2. இரத்த ஒட்டத்தை நன்கு இயக்குகிறது.
3. பொதுவாக தேக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
4. உள் உறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன.
5. நல்ல சுவாசம் நடைபெற உதவுகிறது.
6. ஒவ்வொரு பாகத்தையும் வலுப்படுத்துகின்றது.
7. நல்ல உடல் கோளத்தை ஏற்படுத்துகின்றது.
8. குறைந்த சக்தியைக் கொண்டு நிறைந்த வேலை செய்ய முடிகிறது.
9. மன அமைதி நல்ல புத்துணர்ச்சி உற்சாகம் ஏற்படும்.
10. நோயற்றவாழ்விற்கு வழி கூறுகிறது.