பத்த பத்மாசனம் பயிற்சி செய்யும் முறை :
விரிப்பின் மீது உட்கார்ந்து பத்மாசன நிலைக்குக் கால்களை அமைத்துக் கொள்ளவும். வலக் கையைப் பின்பக்கமாக வளைத்துக் கொண்டு வலக் கால்கட்டை விரலைத் தொட வேண்டும். இடக் கையை பின்பக்கமாக வளைத்து இடக்கால் கட்டை விரலைத் தொட வேண்டும்.
பத்த பத்மாசனம் பயிற்சியின் பலன்கள் :
வயிறு பெரியதாவதைத் தடுக்கும். தொந்தி விழாது. முதுகு கூன் முற்றிலும் போய்விடும்.
பத்த பத்மாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
வயிறு பெரியதாக உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் செய்வது கடினமானதாகத் தோன்றும். கட்டை விரலைத் தொடும் அளவுக்குக் கைகளைப் பின் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் முடிந்தவரை செய்யலாம்.
ஊர்த்வ பத்மாசனம் செய்வது எப்படி