மரீச்சாசனம் பயிற்சி செய்யும் முறை :
விரிப்பின் மீது அமர்ந்து கால்களைச் சேர்த்து நீட்டி வைத்துக் கொள்ளவும். வலது காலைத் தூக்கி வலது விலாப் பக்கம் அனைத்து நிறுத்தவும். நிறுத்திய காலைச் சுற்றி வலது கையைப் பின் பக்கமாக இடுப்புப் பக்கம் கொண்டு வரவும்.
பின்பு இடது கையைப் பின் பக்கமாக கொண்டு வந்து வலது கையுடன் கோர்த்துக் கொண்டு மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டு முன்பக்கம் முதுகை வளைத்து முகத்தை இடது முழங்காலில் சேர்த்து ஒட்டியபடி வைக்கவும்.
பின்பு மூச்சை உள்ளிழுத்து உடலை நிமிர்த்தி இதே போல் மற்றக் காலுக்கும் மாற்றிச் செய்ய வேண்டும்.
மரீச்சாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
நான்கு வினாடி இது மாதிரி நிறுத்தவும். இரண்டு மூன்று முறைசெய்யலாம்.
மரீச்சாசனம் பயிற்சியின் பலன்கள் :
இந்த ஆசனத்தினால் இடுப்பு, முதுகு, கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. பஸ்சிமோத்தானாசனத்தினால் கிடைக்கும் பலன்களுள் பெரும்பாலானவை இந்த ஆசனத்தில் கிடைக்கும்.