ஊர்த்வ பத்மாசனம் பயிற்சி செய்யும் முறை :
ஊர்த்வ பத்மாசனம் (Urdhva padmasana) ஒரு விரிப்பை நன்றாக மடித்து மெத்தென்று இருக்கும்படி தரையில் வைக்கவும். இரு கை விரல்களயுைம் கோர்த்துக் கொண்டு சிரசாசனம் செய்யும் முறையில் விரிப்பின் மீது உள்ளங்கை மேல் நோக்கியபடி வைக்கவும்.
கால்களை மெதுவாகத் தூக்கவும், சிரசாசனம் நிலைக்கு வரவும். மெதுவாக கால்களைப் பத்மாசன நிலையில் அமைக்கவும். பத்மாசனம் போட முடியவிட்டால் சாதாரணமாக உட்காரும் நிலையிலும் கால்களை மடக்கலாம்.
இந்த ஆசனத்தில் பின்புறம் சாய அதிக வாய்ப்பில்லை இருந்த போதிலும் சுவர் பக்கம் செய்ய வேண்டும். மெதுவாக மூச்சை அழுத்து விடவும். மடக்கிய கால்களை எடுத்து மெதுவாகத் தரையில் ஊன்றி நிற்கவும்.
ஊர்த்வ பத்மாசனம் பயிற்சியின் பலன்கள் :
சிரசாசனம் மூலம் கிடைக்கும் பலன்கள் இந்த ஆசனத்திலும் கிடைக்கும்.
சுகாசனம் செய்வது எப்படி