பத்த கோணாசனம் பயிற்சி செய்யும் முறை :
முதலில் விரிப்பின் மீது அமர்ந்து இரண்டு கால்களையும் முன் புறமாக நீட்டவும். பின்பு இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும். மடிப்பதென்றால் வலது காலின் குதிக்கால் வலது தொடைச் சந்தியிலும், இடது காலின் குதிக்கால் இடது தொடைச் சந்தியிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மடிந்திருக்கும் பொழுது நமது இரண்டு உள்ளங்கால்களும் எதிரெதிராக இருக்குமாறு வைக்கவும். பின்னர் இடது கையால் இடது உள்ளங் காலையும், வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தலையைக் குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கவும்.
பத்த கோணாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
பத்து முதல் இருபது நிமிடங்கள் செய்யவும்.
பத்த கோணாசனம் பயிற்சியின் பலன்கள் :
இந்தப் பயிற்சியின் மூலம் சிறுநீரகத்தின் செயற்பாடு நன்றாக அமையும். சிறுநீரகத்தில் ஏற்படும் எந்தக் குறைபாடும் அகலும். கடுமையான இருமலும் இந்த ஆசனத்தின் மூலம் குணமாகும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அவர்களுடைய கர்ப்பாசயம் நல்ல ஆரோக்கியத்துடன் அமையும். அத்துடன் கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியம் கட்டிக் காக்கப்படுவதுடன் பிரசவமும் சுகமாக அமையும்.
ஆண் பெண் இரு பாலாருக்கும் மூத்திரக் கடுப்பு, போன்ற குறைபாடு இருந்தால் இந்த ஆசனத்தின் மூலம் உடனடியாக குணமாகும்.
பத்த கோணாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
இந்த ஆசனத்தை பலமுறைசெய்து பழகிய பிறகு தலையை உள்ளங்கால்கள் மீது வைக்க முயற்சி செய்யவும். இந்தப் பயிற்சியினைச் செய்யும் போது அதாவது முன்புறமாக தலை குனியும் போது ஆசனப் பகுதி மேலெழும்பால் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.