புஜபீடாசனம் பயிற்சி செய்யும் முறை : (Bhujapidasana Shoulder-pressing pose)
முதலில் கால்களை நீட்டியவாறு அமரவும், தலை, முதுகு, முதலியவை நேராக நிதிர்த்தி உட்காரவும். கைகளைத் தொடையோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
அடுத்து கைகளைத் தரையில் ஊன்றி புட்டப் பகுதியை மேலே தூக்கி கால்களை கைகளின் வெளிப்புறமாக வளைத்துப் போட்டு கணுக்கால்களை ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது உடல் பாரம் முழுவதும் தரையில் ஊன்றப் பட்டிருக்கும் கைகளின் மீதே இருக்கும். இந்த நிலையில் சிலவினாடி இருந்த பின்பு கால்களை விடுவித்து அவற்றின் முழங்கால்கள் கைகளின் புஜங்களின் மீது பதிந்து இருக்கும் விதத்தில் சில நிமிடங்கள் இருக்கவும்.
புஜபீடாசனம் செய்யும் நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகள் நிறுத்தவும்.
புஜபீடாசனம் பலன்கள் :
இந்த ஆசனம் தோள்களுக்கு பிரமாதமான வலிமையை கொடுத்து மூளையின் ஆற்றலை அதிகப்படுத்தும். இருதய ரோகங்களை நீக்கும். கழுத்தப் பகுதிக்கு சரியான இரத்த ஒட்டத்தை அளிக்கும்.
புஜபீடாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
பெண்கள் இந்த ஆசனத்தை மாதவிலக்காகும் காலங்களில் மட்டும் செய்து வந்தால் மாதவிடாய் தொடர்பாக சிலருக்குத் தோன்றுகிறபலவகையான குறைபாடுகள் அகலும்.
பெண்கள் இந்த ஆசனத்தை பொதுவாகச் செய்து வந்தாலும் பிரசவம் எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும் அமையும். ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.