கர்ப்பாசனம் (Garbha Pindasana, Embryo in Womb Pose)
கர்ப்பாசனம் என்றால் சேயிருக்கை என்று பெயர் அதாவது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை.
கர்ப்பாசனம் பயிற்சி செய்யும் முறை :
குக்குடாசனம் செய்து முடிந்ததும், அதே போன்று பத்மாசனத்தில் அமர்ந்து கைகளைக் கால்களின் சந்துகளில் விட்டு மெதுவாகக் கால்களை மேலே தூக்கி மார்புடன் அனைத்துக்கொண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடி வரை இது போன்று நிறுத்தவும். இந்த ஆசனத்தை இரண்டு முறை செய்யலாம்.
கர்ப்பாசனம் பலன்கள் :
இந்த ஆசனம் செய்வதினால் கால். கைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. அஜீரணம். மலச்சிக்கல் அகன்று நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆரம்ப சாதகர்கள் காலை உயர்த்தும் போது பின்னுக்கு விழுந்து விடாமல் முதலில் சுவரோமாக இருந்து பழகுவது நலம்.