கோமுகாசனம் (Gomukhasana) பயிற்சி செய்யும் முறை :
முதலில் விரிப்பின் மீது கால்களை நீட்டி உட்காரவும். பின்பு இடது காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று அதாவது முழங்கால் மடிந்து தரை மீது இருக்க பாதம் பின் பக்கமாகச் சென்றிருக்க வேண்டும்.
மடிக்கப்பட்ட கால்கள் மீது அமர்ந்து வலது காலை மடித்து இடது காலுக்கு மறுபுறம் கொண்டு சென்று வலது முழங்கால் இடது முழங்காலுக்கு மேலாக இருப்பது மாதிரியான தோற்றமிருக்க வேண்டும்.
அதற்கு பிறகு வலது கையை முழங்கை மடிய கீழ்ப்பக்கமாக வளைத்து முதுகுப் பக்கம் கொண்டு வந்து அடுத்து இடது கையை வளைத்து தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு வந்து அங்கிருக்கும் வலது கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் உடலை நன்றாக நிமிர்த்திவைத்திருக்க வேண்டும்.
கோமுகாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
பத்து நிமிடங்கள் இருக்கலாம், இரண்டு மூன்று தடவை செய்யலாம்.
கோமுகாசனம் பயிற்சியின் பலன்கள் :
கீழ்வாயுக் கோளாறைஇது நிவர்த்தி செய்யும். உடலில் தசை வலி ஏற்பட்டால் தசை வலி நீங்கும். முதுகு மார்பு பகுதிகளில் ஏற்படும் வலிகளும் குணமாகும்.
பொதுவான உடல் அழற்சி. திமிர்வாதம். உடலில் தோன்றுகிறகுத்தல், குடைச்சல் போன்ற உணர்வுகளையும் இது நீக்கும்.