கஷ்யபாசாசனம் ( Kashyapasana) பயிற்சி செய்யும் முறை :
விரிப்பின் மீது மல்லாந்து படுக்க வேண்டும். வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்து வலது கையை விரிப்பில் பலமாக ஊன்றி உடலை உயரத் தூக்கவும். வலது காலின் விரல் பாகமும் விரிப்பில் ஊன்றியிருக்க வேண்டும். வலது கையும் தவிர மற்றஎல்லாப் பாகமும் விரைப்பாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
பின்பு இடது காலின் முழங்காலை மடித்து வலது தொடையின் மீது அமர்த்தி இடது கையை முதுகின் பின் பக்கமாகச் சுற்றிக் கொண்டு வந்து இடது காலின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். பின்பு உடலை இறக்கி முன் நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் அதே போல் அடுத்த காலுக்கும் மாற்றிச் செய்யவும்.
கஷ்யபாசாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
மூன்று வினாடிகள் நிறுத்தவும், மூன்று தடவை செய்யவும்.
கஷ்யபாசாசனம் பயிற்சியின் பலன்கள் :
இந்த ஆசனம் செய்வதினால் மார்பு நன்கு அகன்று விரிவடைகிறது. கால்களுக்கும். கைகளுக்கும் நல்ல வலிமை கிடைக்கிறது.