குக்குடாசனம் (Kukkutasana, Cockerel Pose,)
குக்குடாசனம் என்றால் சேவல் இருக்கை எனப் பெயர்.
குக்குடாசனம் செய்யும் முறை :
பத்மசானத்தில் அமரவும் இரு கைகளையும் மடித்துள்ள முழங்கால்களின் சந்துகளில் விட்டு. உள்ளங்கைகளினால் தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து பத்மசானத்தில் அமர்ந்தபடியே முடிந்த வரைக்கும் உடலை உயரே தூக்கி நிறுத்த வேண்டும்.
நேர அளவு :
மூன்று முதல் ஐந்து வினாடி வரை நிறுத்தவும். மூன்று முறை இதே போல் செய்யலாம்.
பலன்கள் :
இப்பயிற்சி செய்வதினால் கைகள். தோல்களுக்கு நல்ல வலுவுண்டாகிறது. சோம்பல் நீக்கிச் சுறுசுறுப்பைக் கொடுக்கும் பத்மாசனத்தின் பலனும் இதனால் கிடைக்கிறது.