பரஸ்வோட்னாசனம் (Parsvottanasana) பயிற்சி செய்யும் முறை :

முதலில் கை கால்களைத் தளர்த்தி நேராக நிற்க வேண்டும். அடுத்து மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தவாறு கால்கள் இரண்டையும் இரண்டரை அடி அகலத்திற்கு அகற்றி வைக்கவும்.

முதலில் கை கால்களைத் தளர்த்தி நேராக நிற்க வேண்டும். அடுத்து மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தவாறு கால்கள் இரண்டையும் இரண்டரை அடி அகலத்திற்கு அகற்றி வைக்கவும்.

அதன் பின் முதுகு பக்கம் கைகளை கட்டிக் கொண்டு மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே இடது பக்கமாகக் குனிந்து முகத்தை இடது முழங்கால் முட்டியின் மீது வைக்க வேண்டும்.

குனியும் போது இரண்டு கால்களும் கொஞ்சமும் வளையாமலிருக்க வேண்டும். சிறிது நேரம் இந்த நிலையில் இருந்த பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கி மூக்கின் வழியாக காற்றைமெதுவாக இழுத்தவாறு நேராக நின்று பின்பு அதே போல் வலது பக்கம் குனிந்து வலது கால் முட்டியை தலையால் தொட வேண்டும்.

பரஸ்வோட்னாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து வினாடிகள் செய்யலாம், இரண்டு மூன்று முறைசெய்யவும்.

பரஸ்வோட்னாசனம் பயிற்சியின் பலன்கள் :

பெண்கள் இந்த பயிற்சியினை செய்யலாம், இதனால் இடுப்பு வலிமை பெறும் பெண்களுக்கு இடை சிறுத்து அழகாக இருக்கும் வயிறு தொடர்பான பிணிகளும் அகலும்.

பெண்கள் இந்த பயிற்சியினை செய்யலாம், இதனால் இடுப்பு வலிமை பெறும் பெண்களுக்கு இடை சிறுத்து அழகாக இருக்கும் வயிறு தொடர்பான பிணிகளும் அகலும்.

முதுகெலும்பு வலிமை பெறும். இரத்த ஒட்டம் பெருகி உடலில் சுறுசுறுப்பு உணர்ச்சி மேலோங்கும். தொடைகளும் வலிமை பெறும்.

Previous Post Next Post