உபவிஸ்தகோணாசனம் (Upavistha Konasana) பயிற்சி செய்யும் முறை :
முதலில் விரிப்பின் மீது கால்களை நீட்டியவாறு அமரவும். அதன் பின்பு கால்களைப் பக்கவாட்டில் நேராக நீட்டி கால்களின் பெருவிரல்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளவும்.
அதன் பின் மெதுவாக முன்னுக்குக் குனிந்து முகத்தை விரிப்பில் அமர்த்தவும்.
உபவிஸ்தகோணாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
மூன்று முதல் ஐந்து வினாடிகள் வரை நிறுத்தவும். இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம்.
உபவிஸ்தகோணாசனம் பயிற்சியின் பலன்கள் :
இந்த ஆசனம் செய்வதினால் கால்கள், இடுப்பு, முதுகு, கழுத்துக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இளமையும் வலிமையும் குன்றாமல் இருக்கும். இப்பயிற்சியைத் தினமும் பயின்று வரவும்.