அர்த்த விருச்சிகாசனம் (Vrischikasana or Scorpion pose) செய்யும் முறை :
விரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு இரு குதிகால்களையும் ஒன்று போல் சேர்த்துக் கொள்ளவும். உள்ளங்கைகளை கொண்டு வந்து முகவாய்க் கட்டையையும் விரிப்பின் மேல் படும் படி வைத்துக் கொண்டு கால்கள் இரண்டையும் முதுகின் பக்கமாக வளைக்க வேண்டும்.
பின்பு மூச்சை மெதுவாக வெளியே விட்டுக் கொண்டே தலையைத் தூக்கிப் பின்னுக்கு வளைத்து இரு பாதங்களின் மேல் வைக்கவும்.
நேர அளவு :
ஐந்து ஆறு வினாடி வரை அப்படியே நிறுத்தலாம்.
பலன்கள் :
இப்பயிற்சியைத் தினமும் மூன்று தடவைகள் செய்து வந்தால் உடல் வலுவுறும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
தலையை வளைத்து இருபாதங்களின் மீது வைத்து நிறுத்திய காலத்தில் மூச்சை சவுகரியமாக விடலாம்.