ஏகபாத ஆசனம் (Ekapada asana)
ஏக என்றால் ஒன்று, பாத என்றால் பாதம் ஒரு பாதத்தில் நிற்கிறநிலை.
ஏகபாத ஆசனம் பயிற்சி செய்யும் முறை :
நேராக நிற்க வேண்டும், வலது காலைத் தரையில் நன்றாக ஊன்றி இடது காலைத் தூக்கி வலது தொடையின் மீது வைக்கவும்.
இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும். இப்போது கைகளை உயர்த்தி தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும்.
இப்போது மூச்சை உள்ளிழுத்து முன்னால் ஏதாவது ஒரு புள்ளியில் கண்களை கவனமாக வைக்க வேண்டும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்.
ஏகபாத ஆசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
1 நிமிடம் செய்யலாம் ஒரு முறைபோதுமானது.
ஏகபாத ஆசனம் பயிற்சியின் பலன்கள் :
கால் தசைகள் வலிமை பெறுகின்றன. ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. மனதில் சமநிலை ஏற்படுத்துகிறது. சிசாசனத்தின் பயனை அதிகரிக்கிறது.
ஏகபாத ஆசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்யவும் அதிக பட்சம் இரண்டு முறை.