மயூராசனம் (Mayurasana)
மயூராசனம் என்றால் மயில் இருக்கை எனப்பெயர் மலச்சிக்கலைப் போக்குவதற்கு உன்னத சஞ்சிவியாகக் கிடைத்திருப்பது இந்த மயிலிருக்கை.
விரிப்பின் மேல் மண்டியிட்டு உட்காரவும் முன்னால் குனிந்து இரு உள்ளங்கைகளையும் முழங்கால்களின் அருகில் கை விரல்கள் கால் பக்கம் பார்க்கும்படியாக விரிப்பின் ஊன்றவும் முழங்கைகளின் பலத்தினால் தாங்கி, சமநிலையில் நிறுத்தவும். ஆசன வாயில் மூச்சை சிறிது அடக்கிக் கொள்ளலாம்.
மயூராசனம் பயிற்சி செய்யும் முறை :
பத்து முதல் இருபது வினாடி வரையில் நிறுத்தலாம். ஒரு முறைசெய்தால் போதுமானது.
மயூராசனம் பயிற்சியின் பலன்கள் :
இப் பயிற்சியினால் வயிற்றின் உள்ளுருப்புகள் நன்றாக அமுக்கப்படுவதால் ஆங்காங்குத் தேங்கி நிற்கும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்பட்டுக் குடலானது நன்கு சுத்தப் படுத்தப்படுகிறது.
தொந்தியைக் கரைப்பதுடன் மூலம், நீரழிவு, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல் போன்ற கொடிய வியாதிகளையும் போக்கடிக்கும். நல்ல ஜரண சக்தியைக் கொடுத்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.
மயூராசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆசனம் செய்யும் போது எப்போதும் அவசரப்படக் கூடாது. நிதானமாகச் செய்ய வேண்டும். தலையை முன் பக்கமாக நீட்டி முழங்கால்களை தூக்கும்போது மூக்கு தரையில் மோதி காயம் ஏற்படும். அதுவும் இல்லாமல் வாய், உதடு, பல் ஆகியவைகளும் அடிபடும்.
உடல்பளுவை கைகளில் தாங்கும் போது நரம்புகள் சுளுக்கிக் கொள்ளும் மூட்டுகளில் வலி ஏற்படும். ஆரம்பத்தில் இதுபோன்று ஏற்பட்டாலும் பழகப் பழகச் சரியாகிவிடும். முக்கியமாக வயிற்றில் அபரேஷன் செய்து கொண்டவர்களும் ஹெரனியா எனும் குடலிறக்க தொந்தரவு உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பெண்கள் இப்பயிற்சியை செய்து வரும் போது கர்ப்பம் தரித்தது என்று தெரிந்து விட்டால் உடனடியாக இப்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். இது போன்றசந்தர்பங்களில் தவிர்த்து இப்பயிற்சியை மேற்கொண்டால் உடல் வளம் பெற்று வளமுடன் வாழலாம்.